விஹீர் | |
---|---|
இயக்கம் | உமேஷ் விநாயக் குல்கர்னி |
தயாரிப்பு | அமிதாப் பச்சன் கார்ப்பரேசன் லிமிடெட் |
திரைக்கதை | கிரிஷ் குல்கர்னி, சதீ பாவே |
நடிப்பு | மதன் தியோதர் அலோக் ராஜ்வாடே மோகன் அகஷே சுலபா தேஷ்பாண்டே ஜோதி சுபாஷ் பர்னா பெத்தே |
ஒளிப்பதிவு | சுதீர் பல்சனே |
படத்தொகுப்பு | நீரஜ் வோராலியா |
வெளியீடு | 9 அக்டோபர் 2009(பூசன் சர்வதேச திரைப்பட விழா) |
ஓட்டம் | 135 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | மராத்தி |
விஹீர் (Vihir, பொருள்: கிணறு) [1] என்பது 2009 ஆம் ஆண்டின் மராத்தி திரைப்படமாகும். உமேஷ் விநாயக் கல்கர்னி இப்படத்தை இயக்கியுள்ளார். இது 2010 மார்ச்சில் வெளியிடப்பட்டது. இப்படமானது பெர்லின் திரைப்பட விழா மற்றும் நெதர்லாந்தில் 2010 ஆம் ஆண்டு ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.
இது ஏபி கார்ப் லிமிடெட் நிறுவனத்தின் முதல் மராத்தி படமாகும்.
இப்படமானது சமீர், நசிகேத் என்ற இரு சிறுவர்களின் தத்துவார்த்த உரையாடலை மைய்யக் கதையாக கொண்டது. இந்த இருவரும் வெவ்வேறு நகரங்களில் வசிக்கின்றனர். தங்கள் வாழ்க்கையை கடிதங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்கின்றனர்.
ஒருசமயம் திருமண நிகழ்வு ஒன்றுக்காக சமீர் நசிகேதன் வீட்டுக்கு வருகிறான். அப்போது நசிகேத் பேசும்போது தன் வீடு, குடும்பம், ஊர் இவற்றை விட்டு எங்காவது தனியாக சென்றுவிட விரும்புவதாக சமீரிடம் சொல்கிறான். சில நாட்கள் கழித்து சமீர் நசிகேதனின் மரணம் குறித்து கேள்விப்படுகிறான்.
அதை நம்பாத சமீர் கண்ணாமூச்சி விளையாட்டில் ஒளிந்து கொண்டதுபோல நசிகேத் ஒளிந்து கொண்டிருப்பான் என்று சமீர் நம்புகிறான். அதனால் அவனைத் தேடி காடு மலை என்று தேடி அலைகிறான். இறுதியில் ஆட்டிடையர் ஒருவர் காணாமல் போனவரை உன் இதயத்தில் தேடு என்று ஆற்றுப்படுத்துகிறார். அதன்பிறகு நசிகேத் தன் உள்ளத்தல் இருப்பதாக உணர்கிறான்.
விருது | விருது பெற்றவர் | திரைப்பட விழாக்கள் |
---|---|---|
சிறந்த இயக்குநர் | உமேஷ் குல்கர்னி | |
சிறந்த ஒளிப்பதிவாளர் | சுதிர் பல்சனே | ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா 2010 |
சிறந்த ஒலி வடிவமைப்பு | அந்தோணி பிஜே ரூபன் | |
சிறந்த ஒளிப்பதிவாளர் | சுதிர் பல்சனே | ஜீ கவுரவ் விருதுகள் 2010 |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)