வீணை குப்பய்யர் (1798–1860) தென்னிந்தியாவைச் சேர்ந்த வீணை இசைக் கலைஞரும், கருநாடக இசைப் பாடலாசிரியரும் ஆவார். இவர், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் மாணவர். குப்பய்யர் தனது பாடல்களைத் தெலுங்கு மொழியில் எழுதியுள்ளார்.
குப்பய்யர் 1798ஆம் ஆண்டு சென்னைக்கு அருகிலுள்ள திருவொற்றியூரில் பிறந்தார். இவரின் தந்தை 'வீணை சாம்பமூர்த்தி' என்பவராவார். வீணை வாசிப்பதில் வல்லவரான தனது தந்தையிடம் வீணை வாசிக்கவும், இசையையும் கற்றார். தெலுங்கு, சமக்கிருத மொழிகளையும் கற்றார். தியாகராஜரிடம் மாணவராகச் சேர்ந்து கிருதிகளைக் கற்றார். தியாகராஜர் ஒருமுறை குப்பய்யரின் இல்லத்திற்கு வந்திருக்கிறார். இந்த வருகையை நினைவுகொள்ளும் விதமாகத் தனது 3 மகன்களில் ஒருவருக்கு 'தியாகராஜர்' எனப் பெயரிட்டார் குப்பய்யர். இந்தக் குழந்தையே பின்னாளில் ‘திருவொற்றியூர் தியாகையர்’ என்றழைக்கப்பட்டது. குப்பய்யர் 1860ஆம் ஆண்டு தனது 62ஆம் வயதில் காலமானார்.
தியாகராஜரால் ஊக்குவிக்கப்பட்டு தெலுங்கு மொழியில் வர்ணங்கள், கிருதிகள், கீர்த்தனைகளை எழுதியவர் குப்பய்யர். 'கோபாலதாச' என்பது இவரின் முத்திரையாகும்.
இவர் செய்துள்ள இசை வடிவங்கள்:
இவரின் மாணவர்கள்: