வீர சிவாஜி | |
---|---|
![]() | |
இயக்கம் | கணேஷ் வினாயக் |
தயாரிப்பு | எஸ். நந்தகோபால் |
கதை | கணேஷ் வினாயக் ஞானகிரி (வசனம்) |
இசை | டி. இமான் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | சுகுமார் |
படத்தொகுப்பு | ரூபன் |
கலையகம் | மெட்ராஸ் என்டர்பிரைசஸ் |
விநியோகம் | ஸ்ரீதேனான்டாள் |
வெளியீடு | டிசம்பர் 16, 2016 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வீர சிவாஜி (Veera Sivaji) 2016இல் வெளியான தமிழ் அதிரடி மற்றும் நகைச்சுவைத் திரைப்படம். இயக்கம் கணேஷ் வினாயக், இப்படத்தில் விக்ரம் பிரபு மற்றும் ஷாம்லி ஆகிய இருவரும் முன்னணி பாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை 2015ல் தொடங்கியது.[1][2] உலகளவில் 2016 டிசம்பரில் வெளிவந்தது. பெருமளவில் எதிர்மறையான விமர்சனத்தையே எதிர்கொண்டது. படம் தோல்வி கண்டது.
சிவாஜி வாடகை வண்டி ஓட்டி வருபவன். தனது மருமகளின் அறுவைச் சிகிச்சைக்காக பணம் சேர்த்து வருகிறான். அதற்கான முயற்சி கோணலாக போகி அவன் மிக மோசமான ஒரு வலையில் சிக்கிக் கொள்கிறான். அதிலிருந்து எவ்வாறு மீள்கிறான் என்பது மீதிக் கதை யாரும்.
விக்ரம் பிரபு]] - சிவாஜி
ஷாம்லி - அஞ்சலி
மனிஷா ஸ்ரீ - அஞ்சலியின் தோழி
ஜி. மாரிமுத்து - அஞ்சலியின் தந்தை
இராசேந்திரன் - சி.பி.ஐ அதிகாரி
விடிவி கணேஷ் - பாதுகாவல் அலுவலர்
யோகி பாபு - ரமேஷ்
ரோபோ சங்கர் - சுரேஷ்
ஆன்டிரன்னே நூரிகாட் - வெளிநாட்டுப் பெண்
மகாநதி சங்கர் - சிறைக் கைதி
ஜான் விஜய்
மன்சூர் அலி கான்
ரியோ ராஜ்
காவ்யாஜா - சொப்பன சுந்தரி (பாடலுக்கு நடனம்)
தகராறு படத்தை இயக்கிய கணேஷ் வினாயக்கை வைத்து விக்ரம் பிரபு நடிக்க இத்திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக 2015 ஜுலையில் தயாரிப்பாளர் நந்தகோபால் அறிவித்தார்.[3] 2009 ஆம் ஆண்டு திரைப்படங்களில் ஒரு சிறிய வெற்றிக்குப் பின்னர் ஓய்வு பெற்றிருந்த முன்னாள் குழந்தை நடிகை ஷாம்லி இதில் மீண்டும் நடித்தார்..[4] இராசேந்திரன், ஜான் விஜய் மற்றும் ரோபோ சங்கர் போன்ற நடிகர்கள் அடங்கிய இப்படக்ககுழு புதுச்சேரியில் 2015 செப்டம்பரில் தனது முதற்கட்டப் படப்பிடிப்பபை நடத்தியது.[5][6] நடன இயக்குநர் தினேஷ் இயக்கிய ஒரு பாடல் அந்த மாதத்தின் பிற்பகுதியில், நகரின் கடற்கரையில் படம்பிடிக்கப்பட்டது.[7] விக்ரம் பிரபுவின் பாத்திரம் மற்றும் குழந்தைக்கு இடையிலான உறவு குறித்து கவனம் செலுத்தும் என தயாரிப்பாளர்கள் வெளிப்படையாக தெரிவித்தனர்.[8] 2015 நவம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து சென்னையில் படத்தின் இரண்டாவது கட்டம் படமாக்கப்பட்டது.[9]
வீர சிவாஜி | ||||
---|---|---|---|---|
ஒலித்தொகுப்பு
| ||||
வெளியீடு | 31 ஆகஸ்ட் 2016 | |||
ஒலிப்பதிவு | 2016 | |||
இசைப் பாணி | திரைப்பட ஒலிப்பதிவு | |||
நீளம் | 24:30 | |||
மொழி | தமிழ் | |||
இசைத்தட்டு நிறுவனம் | சோனி மியூசிக் இந்தியா | |||
இசைத் தயாரிப்பாளர் | டி. இமான் | |||
டி. இமான் காலவரிசை | ||||
|
இசையமைப்பாளர் டி. இமான் இப்ப்டதிற்கு இசையமைத்திருந்தார். இதில் தீம் இசை உட்பட இந்த படத்தில் மொத்தமாக 6 பாடல்கள் உள்ளன.[10]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடியோர் | நீளம் | |||||||
1. | "தாறுமாறு தக்காளி சோறு" | சிலம்பரசன், மரிய ரோ வின்சென்ட் | 4:17 | |||||||
2. | "சொப்பனசுந்தரி" | வைக்கம் விஜயலட்சுமி | 4:22 | |||||||
3. | "தவழ்ந்திடும் தங்கப்பூவே" | பாம்பே ஜெயஸ்ரீ | 5:18 | |||||||
4. | "அடடா அடடா" | ஸ்ரீராம் பார்த்தசாரதி]], சிரேயா கோசல் | 4:06 | |||||||
5. | "தாறுமாறு தக்காளி சோறு" (Version 2) | தீபக், மரிய ரோ வின்சென்ட் | 4:17 | |||||||
6. | "ஒன் மேன் ஷோ" | கருவிகள்]] | 2:10 | |||||||
மொத்த நீளம்: |
24:30 |