வீவெலைட்டு

வீவெல்லைட்டு
Whewellite
செருமனியின் சிலெமாவில் கிடைத்த ஒரு வெள்ளை வீவெல்லைட்டு படிகம்.
பொதுவானாவை
வகைஆக்சலேட்டு கனிமங்கள்
வேதி வாய்பாடுCaC2O4·H2O
இனங்காணல்
நிறம்நிறமற்றது, மஞ்சள், பழுப்பு
படிக இயல்புசமமான அல்லது தடிமனான பட்டகப் படிகங்கள்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
இரட்டைப் படிகமுறல்e {101} இரட்டை சமதளம்,
பிளப்பு{101} தெளிவு, {010} ஒழுங்கற்று தெளிவற்று, {001} தெளிவற்று, {110} தெளிவற்று
முறிவுசங்குருவம்
விகுவுத் தன்மைஉடையும்
மோவின் அளவுகோல் வலிமை2.5–3
மிளிர்வுமுத்துப் பளபளப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி2.23
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+), நிறமற்றது (பிரதிபலிக்கப்பட்ட ஒளி)
கரைதிறன்நீரில் கரையாது,அமிலங்களில் கரையும்
மேற்கோள்கள்[1][2][3][4]

வீவெலைட்டு (Whewellite) என்பது CaC2O4·H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். [5]நீரேற்றப்பட்ட கால்சியம் ஆக்சலேட்டு கனிமமாக இது கருதப்படுகிறது. இதன் கரிம உள்ளடக்கம் காரணமாக ஒரு மறைமுக உயிரியல் தோற்றத்தைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. நிலக்கரி மற்றும் வண்டல் முடிச்சுகளில் இதன் இருப்பு இந்த கருதுகோளை ஆதரிக்கிறது. இருப்பினும், உயிரியல் மூலாதாரம் சாத்தியமற்றதாகத் தோன்றும் நீர் வெப்ப படிவுகளிலும் இது கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் காரணத்திற்காக, இது ஒரு உண்மையான கனிமமாக வகைப்படுத்தப்படுகிறது.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் வீவெலைட்டு கனிமத்தை Whe[6] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

வீவெலைட்டு படிக கால்சியம் ஆக்சலேட்டு உயிரியல் மூலங்களிலிருந்தும் உருவாகிறது. சில கற்றாழைகளின் மேற்பரப்பில் சில நேரங்களில் சிறிய படிகங்கள் அல்லது செதில்களாகக் காணப்படுகின்றன. மேலும் சிறுநீரக கற்கள் பெரும்பாலும் ஒரே விதமான கலவையைக் கொண்டுள்ளன.

ஆங்கிலேய பல்துறை வல்லுநர், இயற்கை ஆர்வலர் மற்றும் விஞ்ஞானி, கேம்பிரிட்ச்சில் தத்துவப் பேராசிரியர் மற்றும் படிகவியல் குறியீட்டு முறையைக் கண்டுபிடித்த வில்லியம் வீவெல்லின் (1794–1866) நினைவாக கனிமத்திற்கு வீவெலைட்டு எனப் பெயரிடப்பட்டது.[1]

வெப்பச் சிதைவு

[தொகு]
வீவெல்லைட்டு (கால்சியம் ஆக்சலேட்டு ஒற்றைநீரேற்று) வெப்ப சிதைவு நிறை வளைவு. வீவெல்லைட்டு முதலில் நீரற்ற கால்சியம் ஆக்சலேட்டாகவும், பின்னர் கால்சியம் கார்பனேட்டாகவும் (கார்பன் மோனாக்சைடை இழந்து), இறுதியாக கால்சியம் ஆக்சைடாகவும் (கார்பன் டை ஆக்சைடை இழந்து) சிதைகிறது.

வீவெல்லைட்டு இதன் நன்கு அறியப்பட்ட சிதைவு வெப்பநிலை மற்றும் தயாரிப்புகளின் காரணமாக வெப்ப எடை அளவறிப்பகுப்பாய்வு தரமாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Whewellite: mindat.org
  2. Webmineral.com
  3. Handbook of Mineralogy
  4. Tazzoli, V.; Domeneghetti, M.C. (1980). "The crystal structures of whewellite and weddellite: re-examination and comparison". American Mineralogist 65: 327–334. https://pubs.geoscienceworld.org/msa/ammin/article-abstract/65/3-4/327/41138/The-crystal-structures-of-whewellite-and?redirectedFrom=fulltext. பார்த்த நாள்: 31 December 2020. 
  5. "whewellite". Merriam-Webster Dictionary. Retrieved 30 May 2024.
  6. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.