வெண் வளையக் கரப்பான்பூச்சி (Therea petiveriana) அல்லது "பாலைவன கரப்பான் பூச்சி", "ஏழு புள்ளிகள் கரப்பான் பூச்சி" அல்லது "இந்திய டோமினோ கரப்பான் பூச்சி" எனப்படுவது, தென்னிந்தியாவில் காணப்படும் கிரிபுஸ்குலர் கரப்பான் பூச்சி ஆகும். இவை கரப்பான் பூச்சிகளில் அடித்தள குழுவைச் சேர்ந்தவை.[3][4] இவை பெரும்பாலும் புதர் காடுகளின் தரையில் உதிர்ந்த இலைக் குப்பை அல்லது தளர்வான தரையின் கீழ் வளைகள் அமைத்து வாழ்கின்றன.[5]
இவை கோள வடிவக் கறுப்பு நிற உடலிலைக் கொண்டு உடலின் முதுக்குப் புறத்தில் பக்கத்துக்கு மூன்று, நடுவில் ஒன்று என ஏழு வெண்ணிற வளையங்களைக் கொண்டிருக்கும். கறுப்பு நிற உணர்கொம்புகளும், முள்முடிகளுடன் கூடிய கறுப்பு நிறக் கால்களையும் கொண்டிருக்கும். வீட்டில் காணப்படும் சாதாரணக் கரப்பான்பூச்சிகளைப் போன்று வெண் வளையக் கரப்பான்பூச்சிகளும் அனைத்துண்ணிகளாக, துப்புரவாளர்களாகப் புதர்ச்செடிகளுக்கு இடையே பங்காற்றுகின்றன.[6]
↑Philippe Grandcolas, Yung Chul Park, Jae C. Choe, Maria-Dolors Piulachs, Xavier Bellés , Cyrille D'Haese, Jean-Pierre Farine, Rémy Brossut and Jena-Pierre Farine (2001). "What does Cryptocercus kyebangensis, n.sp. (Dictyoptera: Blattaria: Polyphagidae) from Korea reveal about Cryptocercus evolution? A study in morphology, molecular phylogeny, and chemistry of tergal glands". Proceedings of the Academy of Natural Sciences of Philadelphia151: 61–79. doi:10.1635/0097-3157(2001)151[0061:WDCKNS]2.0.CO;2.