வெண்கல ஓநாய் | |||
---|---|---|---|
![]() | |||
நாடு | உலகளவில் | ||
நிறுவப்பட்டல் | ஆகஸ்டு 2, 1935 | ||
நிறுவுநர் | சாரண இயக்கத்தின் உலக நிறுவனம் | ||
விருதுகள் | சாரணர் இயக்கத்திற்கு உயரிய பங்களிப்பு | ||
Membership | 350 (2016) | ||
| |||
வெண்கல ஓநாய் விருது (Bronze Wolf Award) என்பது உலக சாரணர் இயக்கத்திற்கு உயரிய பங்களிப்பு வழங்கும் ஒருவருக்கு உலக சாரணர் குழு வழங்கும் ஓர் உயரிய விருதாகும்.[1] இது உலகின் தன்னார்வமிக்க சாரண தலைவருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவமான விருதாகும்.[2][3] உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான சாரணர்களில் 400 க்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. உலக சாரணர் குழு 1935ஆம் ஆண்டு ஆகத்து 2 ஆம் நாள் இவ்விருதை வழங்கத் தொடங்கியது.
அசாதாரண சேவை செய்த, குறிப்பிடத்தக்கப் பணியை சாரண இயக்கத்திற்கு ஆற்றிய சாரண தலைவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. தன்னார்வ சேவை, அர்ப்பணிப்பு, வெற்றிகரமான வழிகாட்டுதல் ஆகியவற்றை சாரண இயக்கத்திற்கு வழங்கிய நபரே தகுதி உடையவர் ஆவார்.[4]
1935-1955 காலப்பகுதியில் 12 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. 1955-2015 ஆண்டுகளுக்கிடையில் 346 நபர்களுக்கும் 2016ல் 7 நபர்களுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது. இந்தோனேசியா துணை அதிபர் கெமங்கேகுவானோ,[5][6] சுவீடனின் கார்ல் கெசுடாப், தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யாதெச், பிலிப்பீன்சு அதிபர் பிடெல் ராமோசு ஆகியோர் வெண்கல ஓநாய் விருது பெற்ற முக்கிய நபர்கள் ஆவர்.
வெண்கல ஓநாய் விருது அடர் பச்சை நிற நாடாவை விளிம்பாகக் கொண்டு இரண்டு குறுகிய மஞ்சள் நிற கோடுகள் கீழிறங்குமாறு சாரணச் சின்னத்துடன் அமைந்துள்ளது.[7]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)