வெபர் சோதனை

வெபர் சோதனை

வெபர் சோதனை (Weber test) எனப்படுவது காது கேட்கும் திறனை விரைவில் சோதிக்கும் பரிசோதனைகளுள் ஒன்று. இச்சோதனைக்கு எர்ன்ஸ்ட் ஹைண்ட்ரிக் வெபர் (1795–1878) என்பவரின் நினைவாக வெபர் சோதனை எனப் பெயரிடப்பட்டது. நடுக் காதில் ஏற்படும் காது கேட்கும் திறனிழப்பையும், ஒரு பக்க காது கேட்கும் திறனிழப்பு ஆகியவற்றை கண்டறியப் பயன்படுகிறது. கடத்தல் செவி திறனைக் கடத்துவது நடு செவியிலுள்ள பட்டை சிற்றெலும்பு (incus), சம்மட்டியுருவெலும்பு (malleus), ஏந்தியுருவெலும்பு (stapes) ஆகியவை ஆகும். உணர்நரம்புச் செவி திறனை (Sensorineural hearing ability) கடத்துவது உட் செவிலுள்ள நத்தை எலும்பு (cochlea), உட் தளச்சவ்வு (internal basilar membrane) மற்றும் நத்தை எலும்பிலுள்ள நரம்பு ஆகியவை ஆகும். காதுமடல், காது குழாய் மற்றும் காதுச் சவ்வு ஆகியவை ஒலியை நடுக் காதிற்கு கடத்துகிறது, உணர்நரம்புச் செவி திறனைக் காது மெழுகு பாதுகாக்கிறது.[1]

அதிரும் இசைக்கவையின் அடிப்பாகத்தை ஆய்வுக்கு உட்படுத்தப்படுபவரின் நெற்றிப்பொட்டில் வைத்து அவரிடம் எந்தக் காதில் ஒலி நன்றாகக் கேட்கிறதென வினவ வேண்டும். எந்தக் காதில் சத்தமாய்க் கேட்கிறதோ அந்தக் காதில் கடத்தல் குறைபாடு உள்ளதெனப் பொருள். நரம்புணர்ச்சி குறைபாட்டிலோ இயல்பான காதில் சத்தமாய்க் கேட்கும்.

வெபர் சோதனை செய்யும் விதம்

[தொகு]

வெபர் சோதனை மற்றும் ரினி சோதனை (Rinne test) ஆகியவை சேர்ந்தே செய்யப்பட்டு, காதின் கேட்கும் திறனின் தன்மையும், இழப்பும் கண்டறியப்படுகிறது. வெபர் சோதனைக்கு இசைக்கவைகள் பயன்படுத்தப்படுகின்றன. (பொதுவாக 256 Hz [2] or 512 Hz [3] அதிர்வெண் கொண்டவை வெபர் அதிர்வு சோதனையிலும்; 512 Hz அதிர்வெண் கொண்டவை ரினி கேட்கும் திறன் சோதனையிலும் பயன்படுத்தப்படுகிறது) இசைக்கவைகள் நெற்றியின் நடுப்பகுதியில் அல்லது மேலுதட்டுக்கு மேலே மூக்கிற்குக் கீழே பல்லின் மீது அல்லது நெற்றியின் மேலே காதிலிருந்து சம தூரத்தில் வைக்கப்படுகிறது. பின்னர் நோயாளியின் எந்தக் காதில் அதிக சப்தம் கேட்கிறது என வினவப்படுகிறது. ஆரோக்கியமான காதுகளுக்கு, இரு பக்கமும் ஒரே மாதிரியான சப்தம் கேட்கும். பாதிக்கப்பட்ட காதுகளுக்கு, கடத்தும் திறன் குறைவால் அதிக இரைச்சல் கேட்கும். இதிலிருந்து பாதிக்கப்பட்ட காதுகள் கண்டறியப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் நன்றாக கேட்கும் காதுகளுக்கு அதிக இரைச்சல் கேட்டால், உணர்நரம்புச் செவி திறன் எனக் கண்டறியப்படுகிறது. நேயாளியால் கேட்கும் திறனை அறிய முடியவில்லை எனில் ரினி சோதனையும் சேர்த்து நடத்துப்பட்டு, மருத்துவரே கேட்கும் திறனைச் சோதிப்பார்.

ரினி சோதனையில் பயன்படுத்தப்படும் இசைக்கவை (பொதுவாக 512 Hz) இரண்டு காதுகளுக்குப் பின்பும் எலும்பின் மீது, கேட்கும் ஒலி குறையும் வரை வைக்கப்படுகிறது. உடனே காதின் மீது இசைக்கவை வைக்கப்பட்டு, அதிர்வு கேட்பது எப்போது குறைகிறது என கேட்கப்படுகிறது. ஆரோக்கியமான காதுகளுக்கு வெளியே ஏற்படும் அதிர்வு ஒலியானது, காதுகளுக்குப் பின்னால் ஏற்படும் அதிர்வு ஒலியைவி்ட அதிகமாக இருக்கும். மாறி இருந்தால், காதுகளின் கேட்கும் திறனில் குறைபாடுள்ளது என அறியலாம்.

காற்றின் மூலம் ஒலியைக் கடத்தும் திறனிலுள்ள குறைபாட்டைக் கண்டறிதல்

[தொகு]

நோயாளியின் எந்தக் காதில் இசைக்கவையின் அதிர்வு அதிகம் கேட்கிறதோ, அந்தக் காதின் ஒரு பக்க காது கேட்கும் திறன் குறைவு என அறியலாம். இதற்குக் காரணம் காற்றின் மூலமல்லாமல், எலும்பின் மூலம் ஒலி அதிகம் கடத்தப்படுகிறது, அதாவது காதின் கடத்தும் திறன் குறைபாடுடன் உள்ளது.[4]இது நடுக்காதிலுள்ள எலும்புகளில் ஏற்படும் பாதிப்பால் உண்டாகிறது. அதே நேரத்தில் உட்செவியில் உள்ள பகுதிகளில் பாதிப்பு இல்லாததால், எலும்பின் மீது ஏற்படும் அதிர்வு உணரப்படுகிறது.

நரம்புணர்ச்சி குறைபாட்டால் ஏற்படும் காது கேட்கும் திறனைக் கண்டறிதல்

[தொகு]

காற்றின் மூலம் கடத்தப்படும் ஒலி சரியாகக் கேட்கும் போதும், காது கேட்கும் திறனில் குறைபாடிருந்தால், அது நரம்புணர்ச்சியால் ஏற்படுகிறது. நரம்புணர்ச்சியில் குறைபாடிருந்தால் எலும்பின் மூலம் கடத்தப்படும் ஒலியின் அளவு குறைவாக இருக்கும்..[5]

சோதனையின் பயன்களும் இடர்களும்

[தொகு]

வெபர் சோதனை இரண்டு காதுகளில் உள்ள கேட்கும் திறனிலுள்ள வேறுபாட்டை அறிய உதவுகிறது. காது கேட்கும் திறனின் அளவைக் கண்டறியததால், இச் சோதனை நன்றாகக் கேட்கக்கூடிய காதுகளைக் கண்டறியப் பயன்படுவதில்லை. இரண்டு காதுகளின் கேட்கும் திறனும் ஒரே மாதிரியிருந்தால் இரண்டுமே இயல்பான காதுகளாகவே கருதப்படுகிறது. அதே நேரத்தில் காற்றின் மூலம் பரவும் ஒலியில் ஏற்படும் தடைகளை எளிய முறையில் கண்டறியப்பயன்படுகிறது.

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Does this patient have hearing impairment?". JAMA 295 (4): 416–28. January 2006. doi:10.1001/jama.295.4.416. பப்மெட்:16434632. http://jama.ama-assn.org/cgi/pmidlookup?view=long&pmid=16434632. 
  2. https://www.ncbi.nlm.nih.gov/books/NBK231/
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-10-07. பார்க்கப்பட்ட நாள் 2018-05-13.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-02-27. பார்க்கப்பட்ட நாள் 2018-05-13.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-02-27. பார்க்கப்பட்ட நாள் 2018-05-13.

வெளி இணைப்புகள்

[தொகு]