வெரோனிகா கிபாலிட்டோ

வெரோனிகா கிபாலிட்டோ
இணை ஒலிம்பிக் போட்டிகளில் வெரோனிகா
தனிநபர் தகவல்
தேசியம்பிரேசிலியர்
பிறப்பு2 சூன் 1996 (1996-06-02) (அகவை 28)[1]
சாவோ பெர்னார்டோ டோ காம்போ, பிரேசில்
விளையாட்டு
விளையாட்டுதடகளம் (நீளம் தாண்டுதல், ஓட்டம்)
மாற்றுத்திறன் வகைப்பாடுடி 38 வகைப்பாடு
நிகழ்வு(கள்)விரைவோட்டம்
பதக்கத் தகவல்கள்
மகளிருக்கான இணை தடகளப்போட்டிகள்
நாடு  பிரேசில்
இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2016 இரியோ டி செனீரோ 100 மீட்டர்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2016 இரியோ டி செனீரோ 400 மீட்டர்
ஐபிசி உலகப்போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2013 லியோன் 200 மீட்டர்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2013 லியோன் 100 மீட்டர்

வெரோனிகா சில்வா கிபாலிட்டோ (Verônica Silva Hipólito) (பிறப்பு:1996 சூன் 2) இவர் பிரேசிலின் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டு வீரர் ஆவார். முக்கியமாக டி38 விரைவோட்ட நிகழ்வுகளில் போட்டியிடுகிறார். 2011 ஆம் ஆண்டில் ஒரு பக்கவாதம் ஏற்படுவதற்கு முன்பு இவர் தகுதியான விளையாட்டு வீரராக போட்டியிட்டார். பின்னர் இவரது உடலின் வலது பக்கத்தில் நிரந்தர முடக்கம் ஏற்பட்டது. 2013 ஆம் ஆண்டில், தான் இணை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கேற்க தகுதியுடையவர் என்பதைக் கண்டுபிடித்தார். அந்த ஆண்டு 2013 ஐபிசி தடகள உலகப் போட்டிகளில் பிரேசிலைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

ஆரம்ப வரலாறு

[தொகு]

இவர், 1996 இல் பிரேசிலின் சாவோ பெர்னார்டோ டோ காம்போ என்ற இடத்தில் பிறந்தார். [2] 2008 ஆம் ஆண்டில், இவருக்கு ஏற்பட்ட மூளைக் கட்டி கண்டுபிடிக்கப்பட்டு, அகற்றப்பட்டது. ஆனால் மார்ச் 2011 இல், இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அது இவரது உடலின் வலது பக்கத்தின் இயக்கத்தை பாதித்தது. இவரது வலது காலும், கையும் வலிமையை இழந்தது. இவரது மூளைக் கட்டி 2012 இல் மீண்டும் திரும்பியது. இவருக்கு மருத்துவச் சிகிச்சையளிக்கப்பட்டது.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

இவர், தனது பத்து வயதில் தடகளத்தை நோக்கித் திரும்பினார். நண்பர்களை உருவாக்கவும், முயற்சியின் மதிப்பைக் கற்றுக்கொள்ள உதவவும் இவருடைய பெற்றோர் விளையாட்டை தேர்வு செய்தனர். [2]

அந்த ஆண்டு இவர் 2013 ஐபிசி தடகள உலகப் போட்டிகளில் பிரேசில் அணியை பிரதிநிதித்துவப்படுத்த தேர்வு செய்யப்பட்டார். அங்கு இவர் 100 மீ, 200 மீ டி 38 வகை விரைவோட்டத்திலும், நீளம் தாண்டுதலில் டி 37/38 வகைப்பாட்டிலும் பங்கேற்றார். நீளம் தாண்டுதலில் இவர் ஆறாவது இடத்தைப் பிடித்தார். ஆனால் இவர் 100 மீட்டர் (வெள்ளி) 200 மீட்டர் (தங்கம்) இரண்டிலும் பதக்கம் வென்றார். [2] அடுத்த ஆண்டு இவர் சாண்டியாகோவில் நடந்த 2014 இணை-தென் அமெரிக்க விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றார். அங்கு இவர் 100 மீ, 200 மீ , நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் தங்கம் வென்றார். [3]

குறிப்புகள்

[தொகு]
  1. Verônica Hipólito பரணிடப்பட்டது 2016-09-22 at the வந்தவழி இயந்திரம். rio2016.com
  2. 2.0 2.1 2.2 "Silva Hipolita, Verônica". IPC. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 17 October 2015.
  3. "Verônica Hipólito". rio2016.com/. Archived from the original on 23 June 2015. பார்க்கப்பட்ட நாள் 18 October 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]