வெர்னா எலிசபெத் வாட்ரே இங்க்டி Verna Elizabeth Watre Ingty | |
---|---|
பிறப்பு | 1931-1932 சில்லாங், மேகாலயா, இந்தியா |
இறப்பு | 14 சனவரி 2004 (வயது 72) Shillong |
பணி | சமூக சேவகர் |
வாழ்க்கைத் துணை | பிரதாப் இங்க்டி |
பிள்ளைகள் | பி.டபிள்யூ. இங்க்டி |
விருதுகள் | பத்மசிறீ |
வெர்னா எலிசபெத் வாட்ரே இங்டி (Verna Elizabeth Watre Ingty) இந்திய சமூக சேவகரும் மேகாலயா மாநில நல ஆலோசனை வாரியத்தின் முன்னாள் தலைவரும் ஆவார். [1] துரா அன்னையர் சங்கத்தின் தலைவராகவும் இவர் இருந்தார். 2003 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் நான்காவது உயரிய இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். [2] இந்த விருதைப் பெறும் முதல் காரோ பழங்குடியின நபர் என்ற பெருமை இவருக்குரியதாகும். [3] இங்டி மேகாலயாவின் சில்லாங்கில் 14 ஜனவரி 2004 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று தனது 72 ஆவது வயதில் இறந்தார் [1] இவரது மகன் பி. டபிள்யூ இங்க்டி ஓர் எழுத்தாளராகவும் இந்திய ஆட்சிப்பணி அலுவலராகவும் அறியப்படுகிறார்.[4]