வெற்றிட உலர் பெட்டி ( Vacuum Dry Box ) என்பது கூருணர்வு கொண்ட பொருட்களை கையாள்வதற்கு உதவும் ஒரு பாதுகாப்புக் கருவியாகும். இக்கருவி அவற்றின் கூருணர்வை மட்டுப்படுத்தவும் அல்லது கட்டுப்படுத்தப்பட்ட சூழலை உருவாக்கி அப்பொருள்களை பாதுகாப்புடன் பயன்படுத்தவும் உதவுகிறது [1]. இத்தகைய பாதுகாப்பு சாதனங்கள் பொதுவாக வேதியியல் ஆய்வகங்களின் ஆவி வாங்கியில் காணப்படுகின்றன [2]. கொடிய நோய்க்கிருமிகளைக் கையாளும் நாசா போன்ற அறிவியல் ஆய்வு நிறுவனங்கள் [3], நிலவுப் பாறைகளை ஆய்வுசெய்யும் வசதிகள் கொண்ட ஆய்வகங்கள் மற்றும் தொழிற்சாலைப் பயன்பாடுகளில் இப்பெட்டி பயன்படுத்தப்படுகிறது, மட்டுப்படுத்தப்பட்ட சூழல் கையுறைப் பெட்டியும் வண்ணமடித்தல், மணல் வீச்சு போன்ற செயல்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது [4]
.