வெளிர்சிவப்பு வெள்ளையன்

வெளிர்சிவப்பு வெள்ளையன்
Small salmon arab
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
colotis
இனம்:
C. amata
இருசொற் பெயரீடு
Colotis amata

வெளிர் சிவப்பு வெள்ளையன் (Colotis amata) என்பது ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் காணப்படும் வெள்ளையன்கள் குடும்பத்தை சேர்ந்த வண்ணத்துப்பூச்சி ஆகும். [1]

தோற்றம்

[தொகு]
ஆண் மற்றும் பெண்

சிறகளவு 3.5 செமீ முதல் 5 செமீ வரை இருக்கும். ஆண் மற்றும் பெண் பூச்சிகளில் சிறகின் மேற்புறம் வெளிர் சிவப்பு நிறத்துடன் காணப்படும். முன்சிறகின் மேற்புறத்தில் வெளி விளிம்பு பகுதியானது வெளிர் சிவப்பு நிற புள்ளிகளுடன் கூடிய கருப்பு நிற பட்டைகளை கொண்டிருக்கும். முன் மற்றும் பின்சிறகானது சிறகின் கீழ்ப்புறத்தில் வெளிர் மஞ்சள் நிறத்தில் சில வெளிர் சிவப்பு நிற புள்ளிகளை கொண்டிருக்கும்.

நடத்தை

[தொகு]
  • நிலத்தையொட்டி திறனில்லாமல் சிறகடித்து பறக்கக்கூடியவை.[2]
  • பூக்களில் குறைவாகவே அமரும். இலைகளில் சிறகு பகுதியளவு விரிந்த நிலையில் வெயில் காயும்.
  • வறண்ட மற்றும் கடலோர பகுதிகளில் அதிகமாக காணப்படும்.
  • உயரம் குறைந்த பகுதிகளில் இவற்றின் உணவு தாவரங்கள் உள்ள பகுதிகள் இவற்றின் முக்கிய வாழிடமாகும்.

உசாத்துணை

[தொகு]
  1. Peter Smetacek (2017). A Naturalist's Guide to the BUTTERFLIES OF INDIA. John Beaufoy Publishing Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788175994065.
  2. முனைவர் பானுமதி (2015). வண்ணத்துப்பூச்சிகள்: அறிமுகக் கையேடு. சென்னை: கிரியா. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789382394136.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Colotis amata
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


வெளி இணைப்புக்கள்

[தொகு]