வெள்ளன்கோயில்

வெள்ளாங்கோவில்
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


101 மீட்டர்கள் (331 அடி)


வெள்ளாங்கோவில் (Vellankoil) இந்தியா-தமிழ்நாடு மாநிலம், ஈரோடு மாவட்டத்தில் வெள்ளாங்கோவில் அமைந்துள்ளது.  இது கோபிச்செட்டிப்பாளையம் என்ற ஊரில் இருந்து 10 கி.மீ தொலைவிலும்,பெருந்துறையிலிருந்து 20 கி.மீ தொலைவிலும் ஈரோட்டிலிருந்து 30 கி.மீ தொலைவிலும் உள்ளது.

கல்வி

[தொகு]

அரசு முதல்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பொருளாதாரம்

[தொகு]

பவானி சாகர் அணைக்கட்டிலிருந்து பாய்கின்ற கீழ்பவானி கால்வாய் பாசனமும் மற்றும் கிணற்றுப் பாசனமும் மூலமாக நடைபெறும் விவசாயம் முக்கியத் தொழிலாகும்.நெல்,மஞ்சள்,வாழை,கரும்பு முக்கியப் பயிர்களாகும்.

வெள்ளாங்கோவிலின் முறுக்கு பெயர்பெற்றது.கைத்தறி நெசவுத் தொழிலும் சிறப்பாக முன்பு நடந்து வந்தது.

கோவில்

[தொகு]

ஐப்பசி மாதம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்கு சில நாட்கள் முன்னதாக அல்லது பின்னதாக வரும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் பள்ளி மாரியம்மன் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அக்கம் பக்கத்து கிராமத்து மக்கள் மாட்டு வண்டிகளில் தங்களது விளைநிலங்களில் விளைந்த விளைபொருட்களை காணிக்கையாக செலுத்தி வழிபடுவர்.

சான்றுகள்

[தொகு]


  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.