வெள்ளாயணி காயல் Vellayani Lake വെള്ളായണി കായൽ | |
---|---|
அமைவிடம் | கேரளம், திருவனந்தபுரம் மாவட்டம் |
ஆள்கூறுகள் | 8°24′N 76°59′E / 8.400°N 76.983°E |
வடிநில நாடுகள் | இந்தியா |
குடியேற்றங்கள் | திருவனந்தபுரம் |
வெள்ளாயணி ஏரி அல்லது வெள்ளாயணி காயல் (வட்டார வழக்கு) என்பது கேரளத்தின், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய நன்நீர் ஏரியாகும்.
இது திருவனந்தபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் தம்பனூர்[1] என்ற இடத்தில் உள்ளது. கிழக்கு கோட்டை[2] பேருந்துப் பணிமனையில் இருந்து வெள்ளயாணி ஏரிக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பூங்குளம் சந்திப்பின் வழியாக கோவளத்தில் இருந்து 7கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
இந்த ஏரியைக் கடப்பதற்கு ஏதுவாக ஒரு சாலை கட்டப்பட்டுள்ளது. இந்த ஏரி சுற்றுலாப்பயணிகளை பெரிதும் கவர்கிறது. பார்வையாளர்கள் ஒரு முறை கோவளம் வந்தால் அவர்களால் இந்த அழகான காட்சி நிறைந்த நன்னீர் ஏரியினைக் காணும் வாய்ப்பை அவர்கள் நழுவவிடுவதில்லை. இது மிகவும் தூய்மையான தெளிவான நீர். குறிப்பாக இந்த ஏரியினை இரவு நேரத்தில் நிலவு வெளிச்சத்தில் காணும்போது மனதிற்கு இதமாக உள்ளதாம். அங்குள்ள வட்டார வழக்கில் கொச்சு கோவளம் என்று அழைக்கிறார்கள் அதற்கு சிறிய கோவளம் என்பது பொருளாகும். அந்த ஏரியில் படகுப்போட்டிகள் ஓணம் திருவிழாவின்போது விமரிசையாக நடக்கிறது. இதனைக்காண பெரும் மக்கள் கூட்டம் ஓணத்திருவிழாவின் போது வருகிறார்கள். கோவளம் கடற்கரையில் இருந்து வெள்ளயாணி ஏரிக்கு நாட்டுபடகு சவாரிகள் வசதிகள் வழங்கப்படுகிறது.
ஏரியின் நீரை அகற்றவும், விவசாயத்திற்கு மீளமைக்கப்பட்ட பகுதியை பயன்படுத்தவும் நடவடிக்கை எடுத்தபோது, உள்ளூர்வாசிகளாலும் சுற்றுச்சூழல்வாதிகளாலும் எதிர்க்கப்பட்டது.[3][4] அதனால் இது தற்காலிகமாக கைவிடப்பட்டது. சட்டவிரோத மணல் சுரங்கம், மாசுபாடு மற்றும் நில மீட்பு ஆகியவை ஏரிகளின் நிலையௌ பாதிக்கின்றன.
காக்கமூலா சோரிலிருந்து பார்க்கும் மற்றொரு கடற்கரை வவுவாமுல்ல ஏரியாகும். விழிஞ்சம் சர்வதேச கடற்கரைக்கு குடிநீர் வழங்குவது வவுவாமுலா ஏரி பரிந்துரைக்கப்படுகிறது. டிசம்பர் 2015 இல் இந்த சாலை புதுப்பிக்கப்பட்டது. இது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சாலைகளின் இரு புறமும் சுண்ணாம்புக்காரை அமர்வு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.