![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | வேயின் டிலான் பார்னெல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடதுகை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடதுகை விரைவு மிதம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சு சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் | சனவரி 14 2010 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | பிப்ரவரி 20 2014 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 94) | சனவரி 30 2009 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | நவம்பர் 30 2013 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 8 2015 |
வேயின் டிலான் பார்னெல் (Wayne Dillon Parnell, பிறப்பு: சூலை 30, 1989), தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணியின் பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் இடதுகை விரைவு மித பந்துவீச்சுசாளரான இவர் இடதுகை துடுப்பாளரும் கூட. களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.இவர் தென்னாப்பிரிக்க அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும் இவர் கேப்கோராஸ், வாரியர்ஸ், கிழக்கு மாகாணம், கெண்ட் மாகாணத் துடுப்பாட்ட அணி, சசெக்ஸ் துடுப்பாட்ட அணி, கிளாமோர்கன் மாகாணத் துடுப்பாட்ட அணி, இங்கிலாந்து மாகாணத் துடுப்பாட்ட அணி, பார்படோசு ஆகிய அணிக்களுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் இவர் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் புனே வாரியர்சு இந்தியா ஆகிய அணிகளுக்காக விளையாடினார்.
2006 ஆம் ஆண்டு முதல் இவர் முதல்தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வந்தார். அக்டோபர் 2006 இல் இவருக்கு 17 வயதாக இருந்த போது கிழக்கு மாகாண அணிக்காக விளையாடினார். அந்தப் போட்டியில் 17 ஓட்டங்களையும் ஓர் இலக்கினையும் கைப்பற்றினார். இரண்டாவது முதல்தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் ஏழு ஓட்டங்களை விட்டுக் கொடுத்து நான்கு இலக்குகளைக் கைப்பற்றினார்.[1] மேற்கு மாகாணத்திற்கு எதிரான தனது ஐந்தாவது போட்டியில் இவர் ஹேட்ரிக் இலக்கினைக் கைப்பற்றினார். அதில் மூன்று வீரர்களையும் பவுல்டு முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.[2] இஅவ்ர் கிழக்கு மாகாண அணிக்காக விஆளியாடிய போது கோகோ கோலா கயா மஜோலா எனும் விருதினையும் சிஎஸ் ஏ வின் ஆண்டின் சிறந்த 19 வயதிற்கு உட்பட்ட துடுப்பாட்ட வீரர் எனவும் விருது பெற்றார்.[3]
2009 ஆம் ஆண்டில் இவர் கெண்டி மாகாணத் துடுப்பாட்ட அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆனார். இசுட்டூவர்ட் கிளார்க் காயம் காரணமாக வெளியேறியதால் அவருக்குப் பதிலாக இவர் தேர்வானார்.[4] இவர் விளையாடிய முதல் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 78 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து நான்கு இலக்குகளைக் கைப்பற்றினார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் இவர் 69 ஓட்டங்களை எடுத்தார். தனது முதல் போட்டியில் முதல் ஐம்பது ஓட்டங்களாஇ எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இவர் டெல்லி டேர்டெவில்சு அணிக்காக விளையாடினார்.[5]இவருக்கு நிர்ணயிக்கப்பட்ட ஏலத் தொகையினை விட அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இதன்மூலம் அதிக தொகைக்கு ஏலம் போன மூன்றாவது தென்னாப்பிர்க்க வீரர் எனும் பெருமை பெற்றார்.[6] ஆனால் இவர் டெல்லி அணிக்காக எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை.[7]
2011 முதல்; 2013 ஆம் ஆண்டுகள் வரை நடைபெற்ற மூன்று இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளிலும் இவர் புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார். ஆனால் 2014 ஆம் ஆண்டில் இவர் மீண்டும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார்.[8] இவர் பல சமயங்களில் போதைப் பொருட்கள் உட்கொன்டதற்காக நீதிமன்றம் சென்றுள்ளார்.[9] 2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற உலக இருபது20 தொடரில் விளையாடும் தென்னாப்பிரிக்க அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். அப்போது நீதிமன்றத்தில் ஆஅராகி தான் எந்த போதைப் பொருளும் உட்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.[10] [9] 2016 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இவர் பார்படோசு டிரைடெண்ஸ் அணிக்காக விளையாடினார். 2018 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட குளோபல் இருபது20 தொடரில் இவர் விளையாடினார். சூன் 3, 2018 இல் நடைபெற்ற வீரர்கள் தேர்வின் போது இவர் எட்மண்ட்டன் ராயல்சு அணிக்காக விளையாடத் தேர்வானார்.[11] இந்தத் தொடரின் ஆறு போட்டிகளில் விளையாடி ஆறு இலக்குகளைக் கைப்பற்றி அதிக இலக்குகளைக் கைப்பற்றிய எட்மண்ட் ராயல்ஸ் வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.[12]
2018 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட ஆப்கானித்தான் பிரீமியர் லீக்கின் முதல் பருவத்தில் இவர் விளையாடினார்.செப்டம்பர் 2018 ஆம் ஆண்டில் அரிவிக்கப்பட்ட அணியின் பட்டியலில் இவர் காபூல் அணிக்காகத் தேர்வானார்.[12] இந்தத் தொடரின் பத்து போட்டிகளில் விளையாடிய இவர் 13 இலக்குகளைக் கைப்பற்றி அதிக இலக்குகளைக் கைப்பற்றிய கபுல் சவானன் அணி வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.[13]
2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் தென்னாப்பிரிக்க அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும் இவர் 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரிலும் தென்னாப்பிரிக்க அணியின் சார்பாக விளையாடினார். மேலும் 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 8 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஆறு இலக்குகளைக் கைப்பற்றினார். மேலும் மட்டையாட்டத்தில் 57 ஓட்டங்களை அடித்தார்.[14] இந்தத் தொடரில் அதிக இலக்குகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 18 இலக்குகள் எடுத்து முதல் இடத்தில் இருந்தார்.இவரின் பந்துவீச்சு சராசரி 8.38 ஆக இருந்தது.[15]
2008 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகள் கொண்?ட தொடரில் விளையாடியது.[16][17] இதில் சனவரி 13 இல் , பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் பந்துவீசி அதிக ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார் . மேலும் களத் தடுப்பாட்டத்தில் முக்கிய வீரர் அடித்த பந்தை பிடிக்கத் தவறினார். பின் பார்வையாளர் ஒருவர் லேசர் ஒளியை அடித்ததனால் அந்தப் பந்தை பிடிக்க முடியவில்லை என விளக்கம் தெரிவித்தார்.[18]
2009 ஐசிசி உலக இருபது20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். மே மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடினார். இதில் 9 இலக்குகளைக் கைப்பற்றினார். இவரின் பந்துவீச்சு சராசரி 13.22 ஆகும்[19]. இதில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 14 ஓட்டங்களை விட்டுக் ஒடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். துவக்க ஓவர்களில் 2 ஓவர்களை வீசி 2 ஒட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 1 இலக்கினைக் கைப்பற்றினார்.[20] இதன் பின் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள்வீசி 13 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார்.[21] இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். இவரின் நிலையான விளையாட்டுத் திறனால் அணியில் நிலையான இடம் கிடைத்தது.[22] இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தங்கப் பந்து வென்றார்.
ஜூலை 28, 2011 ல் இஸ்லாத்தை ஏற்றிருப்பதாக இவர் அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் தன் பெயரை புதிதாய் பிறந்த மகன் என பொருள்தரும் வலீத் என வைக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இஸ்லாத்தை பற்றிய குறித்த கால ஆராய்ச்சிக்கு பிறகு இம்முடிவை அவர் எடுத்ததாக தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்க மக்களும் ஊடகங்களும் தன் கிரிக்கெட் ஆட்டத்தில் காட்டும் ஆர்வத்தை மதிக்கும் அதே வேளையில் எந்நம்பிக்கையை ஏற்பது என்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும் கூறியுள்ள அவர் அதை ராசிகர்கள் மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.[23][24]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: வேயின் பார்னெல்