வைசாலி காசரவள்ளி | |
---|---|
பிறப்பு | குல்பர்கா, கருநாடகம், இந்தியா | 12 ஏப்ரல் 1952
இறப்பு | 27 செப்டம்பர் 2010 பெங்களூர், கருநாடகம், இந்தியா | (அகவை 58)
வாழ்க்கைத் துணை | கிரிசு காசாரவள்ளி]] (தி. 1978–2010) |
பிள்ளைகள் | அபூர்வா (மகன்) அனாயா (daughter) |
வைசாலி காசரவள்ளி (Vaishali Kasaravalli-12 ஏப்ரல் 1952- செப்டம்பர் 2010) ஒரு புகழ்பெற்ற கன்னட நடிகை, தொலைக்காட்சி தொடர் இயக்குநர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஆவார்.
1952ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி குல்பர்காவில் நாடக ஆர்வலர் பெற்றோர்களான சிதகோபி மற்றும் நிர்மலா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் இளங்கலைப் பட்டம் பெற்றார் .
வைசாலி, பி. வி. கராந்த் என்பவரால் நாடகத் துறையில் அறிமுகமானார். இவரது குடும்பம் பெங்களூருக்குக் குடிபெயர்ந்த பிறகு, ஹயவதனா, ஜோகுமாரசுவாமி, மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம், நாடககாரனா ஷ்தனெயல்லி ஆரு பத்ரகலு மற்றும் பல நாடகங்களில் நடித்தார். சேவந்தி பிரசங்காவை இயக்கினார். மராத்தி மற்றும் இந்தியில் இருந்து பல உன்னதமான படைப்புகளை மொழிபெயர்த்தார்.
இவர் யாவ ஜன்மத மைத்ரி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 1972-இல் பேராசிரியர் ஹுச்சுராயா என்ற திரைப்படத்தில் நடித்தார். இவரது பிரபலமான திரைப்படங்கள் அக்ரமானா, யாரிகு ஹெல்பெடி, கிட்டு புட்டு, குபி மட்டு இயாலா, அங்கையல்லி அப்சாரே, க்ரௌர்யா, ஹோம்பிசிலு, சுவாமி, தபரனா காத்தே, ஷீரா சாகரா, அனுகோலக்கோபா கந்தா, அசெகோபா மீசெகோபா, மூரு தாரிகலு, மகாதசோஷி சரண பசவா, சந்திரமுகி பிரணசகி, பஞ்சாரதா கிலி, ஹூவோந்து பெக்கு பல்லிகே, விக்னேஸ்வரன வாகனா, சங்கர் குரு, பாலிதம்ஷா, பரிவர்த்தனா, ஸ்பர்ஷா, நிகதா, கணேசனா மதுவே, கௌரி கணேஷா, தவருமனே உடுகோரே, எண் 73 சாந்தினிவாச, மற்றும் பல. கிரிஷ் காசரவள்ளி இயக்கிய ஆக்ரமானாவில் முன்னணி கதாநாயகியாக நடித்ததன் மூலம் இவர் விருதுகளையும், சிறந்த நடிகைக்கான மாநில அரசின் விருதையும் வென்றார்.
நம்ம நம்மள்ளி, காசா முஷூர் சரோஜா, மால்குடி டேஸ், க்ஷமய தரிட்ரி, மாயாம்ருகா, மான்வந்தரா, சாதனே உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களிலும் வைசாலி நடித்தார். டி. எஸ். நாகாபரணா இயக்கிய நம்ம நம்மள்ளி தான் இவர் நடித்த தொடர்களில் முதலாவது ஆகும்.
வைசாலி 'முட்டினா தோரணா' மற்றும் 'மூடலா மானே' போன்ற பிரபலமான கன்னடத் தொலைக்காட்சி தொடர்களை இயக்கியுள்ளார்.
காசரவள்ளி தனது கணவரின் திரைப்படங்களான பானாடா, வேசா, மானே, குபி மாது இய்யாலா, க்ரௌர்யா, தாய் சாஹேபா (1998-இல் தேசிய விருது), தீபா மற்றும் கனசெம்பா குடுரையநேரி போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றினார்.
வைசாலி பல விருதுகளைப் பெற்றார்.
வைசாலி 90களின் பிற்பகுதியில் அரசியலில் இருந்தார். 1996ஆம் ஆண்டு பெங்களூர் மாநகராட்சித் தேர்தலில் லோக் சக்தி கட்சியிலிருந்து போட்டியிட்டார். முதலமைச்சர் இராமகிருஷ்ண மகாபலேஷ்வர் தீவிர ரசிகையாக இருந்தார்.[1]
வைசாலி புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் கிரிசு காசரவள்ளியை மணந்தார். இவருக்கு அபூர்வ காசரவள்ளி மற்றும் அனன்யா காசரவள்ளி என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர்.[2]
நீரிழிவு நோய், கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்சினைகளால் சில ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்ட பின்னர், இவர் செப்டம்பர் 27,2010 அன்று பெங்களூரில் இறந்தார்.