வைதேகி Vaidehi | |
---|---|
![]() | |
பிறப்பு | வசந்தி[1] 12 பெப்ரவரி 1945 குந்தாபுரா (கருநாடகம்), Udupi, கருநாடகம், பிரித்தானிய இந்தியா |
புனைபெயர் | வைதேகி |
தொழில் | எழுத்தாளர் |
தேசியம் | இந்தியர் |
வகை | கன்னட மொழிப் புனைகதை |
குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்திய அகாதமி விருது 2009 |
துணைவர் | கே.எல். சிறீனிவாச மூர்த்தி |
பிள்ளைகள் | 2 |
வைதேகி (Vaidehi) என்பவர் கன்னட மொழி பெண் எழுத்தாளர்களில் ஒருவராவார். இவரது இயற்பெயர் ஜானகி சிறீனிவாச மூர்த்தி என்பதாகும். 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பெண்ணிய எழுத்தாளராகவும் நவீன கன்னட மொழி புனைகதைகளின் நன்கு அறியப்பட்ட எழுத்தாளராகவும் அறியப்படுகிறார். கன்னட மொழியின் வெற்றிகரமான பெண் எழுத்தாளர்களில் ஒருவரான இவர் மதிப்புமிக்க தேசிய மற்றும் மாநில அளவிலான இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.[2] கன்னட மொழிக்கான சாகித்திய (இலக்கிய) விருதினை இவர் தன்னுடைய கிரௌஞ்ச பட்சிகளு என்ற சிறுகதைத் தொகுப்புக்காகப் பெற்றுள்ளார்.
1945 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதியன்று எப்பர், மகாலட்சுமி தம்பதியருக்கு கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தபுரா தாலுக்காவில் பிறந்தார்.[3] ஒரு பெரிய பாரம்பரிய பிராமண குடும்பத்தில் வளர்ந்தார். குந்தாபுராவில் உள்ள பண்டார்கர் கல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவரது தந்தை ஒரு வழக்கறிஞர் மற்றும் இவரது தாயார் ஒரு இல்லத்தரசி. இவரது வீட்டில், குந்தாப்பூர் கன்னடம் எனப்படும் கன்னடத்தின் பேச்சுவழக்கு பேசப்பட்டது. மேலும் இவர் தனது படைப்புகளிலும் இந்த பேச்சுவழக்கை பயன்படுத்துகிறார்.[4] ஓர் அசாதாரண சூழ்நிலையில் வைதேகி புனைப்பெயருக்கு மாறினார். எழுத்து வாழ்க்கையின் ஆரம்பத்தில், தன்னுடைய இயற்பெயரில் கன்னட வார இதழான சுதாவுக்கு ஒரு கதையை அனுப்பியிருந்தார். ஆனால் பின்னர் அந்தக் கதை கற்பனையானதல்ல என்றும் நிஜ வாழ்க்கைக் கதையை உள்ளடக்கியதால் அச்சிடுவதைத் தொடர வேண்டாம் என்றும் இவர் வெளியீட்டாளரைக் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசிரியர் பெயரை 'வைதேகி' என்று மாற்றி புத்தகப் பதிப்பை முன்னெடுத்தார். இந்த பெயர் பிற்கால எழுத்துக்களில் ஒட்டிக்கொண்டது, பிரபலமும் அடைந்தார்.
வைதேகி 23 வயதில் கே.எல். சீனிவாச மூர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு நயனா காசியப் மற்றும் பல்லவி ராவ் என்ற இரு மகள்கள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு வைதேகி சிமோகாவிற்குச் சென்றார். குடும்பம் பின்னர் உடுப்பிக்கும் பின்னர் அவர்கள் தற்போது வசிக்கும் மணிபாலுக்கும் இடம்பெயர்ந்தது. வைதேகியின் மகள் நயனா காசியப் ஒரு மொழிபெயர்ப்பாளர் ஆவார். கன்னட எழுத்தாளர் மற்றும் ஆங்கில ஆசிரியர் என அறியப்படுகிறார். ஐந்து நாவல்கள் உட்பட வைதேகியின் சில படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.