வோன் பேயர் பெயரிடல் (Von Baeyer nomenclature) என்பது பல்வளைய ஐதரோகார்பன்களை விவரிக்கப் பயன்படும் ஒர் அமைப்பு முறையாகும். இந்தப் பெயரிடும் முறை முதலில் 1900 ஆம் ஆண்டு அடால்ஃப் வோன் பேயரால் இருவளைய சேர்மங்களுக்காக உருவாக்கப்பட்டது[1]. பின்னர் 1913 ஆம் ஆண்டில் எட்வர்டு புக்னர் மற்றும் வில்லெம் வைகண்டு ஆகியோரால் மூவளைய சேர்மங்களுக்காக விரிவாக்கப்பட்டது[2]. பின்னாளில் கரிமச் சேர்மங்களுக்குப் பெயரிட்டு முறைப்படுத்தும் ஐயுபிஏசி அமைப்பும் இம்முறையை ஏற்றுக் கொண்டு மேலும் விரிவுபடுத்தியது. இத்திட்டத்தின் விரிவுபடுத்தப்பட்ட நவீன பதிப்புகள் வளையங்களின் குறியீட்டு எண்கள், பல்வளைய சேர்மங்கள், நிறைவுறா சேர்மங்கள் போன்றவற்றையும் விவரிக்கும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளன[3].