ஷாஜகான் | |
---|---|
இயக்கம் | ரவி |
தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி |
கதை | கே. எஸ். ரவி பிரசன்னா குமார் |
இசை | மணி சர்மா |
நடிப்பு | விஜய் ரிச்சா பலோட் விவேக் கோவை சரளா கிருஷ்ணா மீனா (நட்புக்காக) நிழல்கள் ரவி தேவன் அஜய் ரத்னம் பாலாஜி சசிக்குமார் கோவை பாபு விஷால் |
ஒளிப்பதிவு | ஆர்தர் ஏ. வில்சன் |
படத்தொகுப்பு | வி. ஜெய்சங்கர் |
வெளியீடு | நவம்பர் 14, 2001 |
ஓட்டம் | 160 நிமி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஷாஜகான் (Shahjahan) என்பது 2001 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி காதல் திரைப்படமாகும். ஆர். பி. சௌத்ரி தயாரிப்பில் இரவியால் எழுதி இயக்கப்பட்டது. இப்படத்தில் விஜய், ரிச்சா பல்லோட் (தமிழ் அறிமுகத்தில்) மற்றும் கிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விவேக் மற்றும் கோவை சரளா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். மணி சர்மா இசையமைத்த இப்படம் 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியானது. ஒரு காதல் மருத்துவரின் காதல் வாழ்க்கை மற்றும் அவரது காதல் வாழ்க்கை எப்படி தெரியாமல் சோகத்தில் முடிகிறது என்பதுதான் படத்தின் கதை. இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது மற்றும் 125 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது.[1][2][3]