ஷியாம் நந்தன் சஹாய் | |
---|---|
பிறப்பு | பீகார், இந்தியா |
இறப்பு | இந்தியா |
கல்லறை | முசாபர்பூர் |
மற்ற பெயர்கள் | இராவ் பகதூர் ஷியாம் நந்தன் சஹாய் |
பணி | கல்வியாளர் நில உரிமையாளர் மக்களவை உறுப்பினர் |
அறியப்படுவது | கல்விச் செயல்பாடுகள் |
விருதுகள் | பத்ம பூசண் |
ஷியாம் நந்தன் சஹாய் (Shyam Nandan Sahay) ஓர் இந்திய நில உரிமையாளரும், கல்வியாளரும், மக்களவை உறுப்பினரும், பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் துணைவேந்தரும் ஆவார்.[1] இந்திய மாநிலமான பீகாரில் பிறந்த இவர் பாட்னா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.[2] இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக முசாப்பர்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து முதலாவது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இவர் 1957இல் மீண்டும் முசாபர்பூரிலிருந்து வென்றார். ஆனால் அதே ஆண்டில் இறந்தார். கல்விக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக 1957ஆம் ஆண்டில் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை கௌரவமான பத்ம பூசண் விருதை இந்திய அரசு இவருக்கு வழங்கியது.[4] முசாபர்பூரில் ஒரு சாலைக்கு இவரது பெயரிடப்பட்டது.
{{cite web}}
: Unknown parameter |https://www.webcitation.org/6U68ulwpb?url=
ignored (help)