ஷீக் கபாப் என்பது (உருது: سیخ کباب, இந்தி: सीख कबाब) ஆட்டிறைச்சியில் மசாலா சேர்த்து துணுக்குகளாக்கி உருளைவடிவமாக்கி கம்பியில் இந்தியா, பாக்கித்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான்[1][2] போன்ற நாடுகளில் செய்யப்படும் வழக்கமான கபாப் ஆகும். பொதுவாக மங்கல் அல்லது தந்தூர் அடுப்புகளில் சமைக்கப்படுகிறது.
ஷீக் கபாப் பொதுவாக மென்மையானவை மற்றும் சதைப்பற்றுள்ளவையாகும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மிளகாய் தூள், கரம் மசாலா அத்துடன் எலுமிச்சை சாறு கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள் போன்று பல்வேறு பொருள்கள் சேர்த்து பதப்படுத்தப்படுகிறது.[3] சில சமயங்களில் சுவையினைக் கூட்ட கொழுப்பு சேர்க்கப்படுகிறது. ஷீக் கபாப் பொதுவாக ரைதா, சாலட், வெங்காயத் துண்டுகள், எலுமிச்சை குடைமிளகாய் அல்லது பச்சை சட்னியுடன் பரிமாறப்படுகிறது. நான் அல்லது பரோட்டாவுடன் உண்ணப்படுகிறது.
துண்டே கே கபாப், ககோரி கபாப் மற்றும் கிலாஃபி ஷீக் கபாப் ஆகியவை பிரபலமான ஷீக் கபாப் ஆகும். இந்தியாவில் சைவ ஷீக் கபாப்கள் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, காலிஃபிளவர் மற்றும் பச்சை பட்டாணி கொண்டு தயாரிக்கப்படுகின்றன.