ஷேன் பாண்ட்

2009 இல் பாண்ட்

ஷேன் எட்வர்டு பாண்ட் (Shane Edward Bond (பிறப்பு: 7 சூன் ,1975) என்பவர்  நியூசிலாந்துத் துடுப்பட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். தற்போது இவர் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில்மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக உள்ளார். நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணியின் சர் ரிச்சர்டு ஹேட்லீ என இவர் அழைக்கப்பட்டார் .[1][2][3] இவர் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் , ஒருநாள் பன்னட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இவர் கேண்டர்பியூரி அணிக்காக நியூசிலாந்தின் உள்ளூர்ப் போட்டிகளிலும் வார்க்விக்‌ஷயர் அணிக்காக இங்கிலாந்து உள்ளூர்ப் போட்டிகளிலும் இவர் விளையாடியுள்ளார். இவர் வலது கை விரைவு வீச்சாளர் ஆவார்.2003 ஆம் அண்டில் நடைபெற்ற துடுப்பாட்ட உலகக் கிண்னத் தொடரில் இந்திய துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் மணிக்கு 156 கிலோமீட்டர் வேகத்தில் இவர் பந்துவீசினார்.[4]

பாண்டின் துடுப்பாட்ட வாழ்க்கையில் பெரும்பான்மையான காலங்கள் காயங்களினால் அவதிப்பட்டுள்ளார்.2004 ஆம் ஆண்டில் காயம் ஏற்படாமல் இருப்பதற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டார்[5] ஆனால் அவை முழுமையான பலனை அளிக்கவில்லை. இந்தக் காயங்களினால் இவர் பல தொடர்களில் விளையாட இயலாமல் போனது. 2001 ஆம் ஆண்டில் இவர் விளையாடத் துவங்கினார் . ஆனால் மொத்தமாக இவர் 18 தேர்வுத் துடுப்பட்டப் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். பின் 2009 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அப்போது அவருக்கு வயது 34 ஆகும்.[6]

2008 ஆம் ஆண்டில் இந்தியன் கிரிக்கெட் லீக்கில் விளையாடியதால் இவருக்கு 18 மாதங்கள் விளையாடுவதற்கு நியூசிலாந்து துடுப்பாட்ட வாரியம் தடை விதித்தது.[7] மேலும் இவருடன் செய்த ஒப்பந்தத்தையும் 2008 ஆம் ஆண்டில் திரும்பப் பெற்றது.[8] பின் 2009 ஆம் ஆண்டில் இவர் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டார்.[9] சனவரி 2010 ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது பருவகாலத்தில் இவர் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். மே 13, 2010 இல் அனைத்து வடிவ போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணியின் சிறந்த பந்துவீச்சாளராக இவரை கிரிக் இன்ஃபோ தளம் அறிவித்தது.[10]

தேர்வுத் துடுப்பாட்டப் பந்துவீச்சாளர்களின் சிறந்த ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளவர்களின் பட்டியலில் இவர் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். முதல் இடத்தில் ஜார்ஜ் லோமன் உள்ளார்.[11]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

பாண்ட் பாபனுய் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். டிரேசி பாண்ட் எனபவரை இவர் மணந்தார்.  இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.  சர்வதேச துடுப்பாட்ட வீரராக வருவதற்கு முன்பு இவர் கிறிஸ்ட்சர்ச்சில்  காவல் அதிகாரியாக இருந்தார். இவர் சர் மார்க் சாலமன் என்பவரின் மருமகன் ஆவார்.

உள்ளூர்ப்போட்டிகள்

[தொகு]

1997 ஆம் ஆண்டில் தனது முதல் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். சனவரி 20, 1997 ஆம் ஆண்டில் கேண்டர்பியூரி அணிக்காக செண்ட்ரல் மாவட்ட அணிக்கு எதிரான முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். தனது முதல் போட்டியில் விளையாடும் போது இவருக்கு வயது 21 ஆண்டுகள் 7 மாதம் ஆகும். இவர் 12 முதல் தரட்ப்போட்டிகளில் விளையாடினார். முதல் மூன்று பருவங்களில் இவரின் பந்து வீச்சு சிறப்பானதாக இருந்தது. நவம்பர் 1999 ஆம் ஆண்Dஇல் இவர் காவல் அதிகாரியாகத் தேர்வான பின்பு சுமார் ஓர் ஆண்டு துடுப்பாட்டம் விளையாடவில்லை. 2000-01 ஆம் ஆண்டுகளில் மீண்டும் இவர் கேண்டர்பியூரி அணிக்காக துடுப்பாட்டம் விளாஇயாடத் துவங்கினார். 2001-02 ஆம் ஆண்டுகளில் சர்வதேசப் போட்டிகளில் விளையாட இருந்த காரணத்தினாலும் , காயங்கள் ஏற்பட்டதனாலும் இவர் கேண்டர்பியூரி அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் இயலாமல் போனது.

இவர் 2002 ஆம் ஆண்டில் இங்கிலாந்து கவுண்டி துடுப்பாட்டப் போட்டிகளில் தோன்றினார், மூன்று கவுண்டி வாகையாளர் தொடர்களில் இவர் வார்விக்ஷயர் அணி சார்பாக விளையாடினார். அந்தத் தொடர்களில் சிற்பாக பந்து வீசி அணியின் வெற்றிக்கு உதவினார். 2008 சீசனில் ஹாம்ப்ஷயருக்காக அணிக்காக விளையாட இவர் தேர்வானார்.

இந்திய கிரிக்கெட் லீக் தொடர்களில் மார்ச் / ஏப்ரல் 2008 பருவத்தின் போது டெல்லி ஜயண்ட்ஸிற்காக ஏழு இருபது -20 ஆட்டங்களில் பாண்ட் விளாஇயாடினார், ஆனால் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தத் தவறினார். அந்தத் தொடர்களில் இவர் இரண்டு இலக்குகளை மட்டுமே 86.50 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

ஐ சி எல்

[தொகு]

ஜனவரி 2008 இல், தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணத்தில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வந்தபோது, அதிகாரப்பூர்வமற்ற இந்திய கிரிக்கெட் லீக்கில் விளையாட பாண்ட் கையெழுத்திட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தத் தொடர்களில் விளையாடக் கூடாது என நியூசிலாந்து துடுப்பாட்ட வாரியம் அரிவித்தது . மேலும் அங்கு விளையாடிய வீரர்களின் ஒப்பந்தம் ரத்தானதாக நியூசிலாந்து துடுப்பாட்ட வாரியம் அறிவித்தது. மேலும் தனக்கு நியூசிலாந்து வாரியம் கொடுக்கும் பணம் போதுமானதாக இல்லை எனவும் ஐ சி எல்லில் பங்கேற்பதன் மூலம் தனக்கு போதுமான பணம் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மே 2009 இல், இந்திய கிரிக்கெட் லீக் பல வீரர்கள் உடனான தங்களின் ஒப்பந்தங்களிலிருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவித்தது, ஜூன் மாதத்தில் பாண்ட் நியூசிலாந்து துடுப்பாட்ட வாரியத்திடம் தான் ஐ சி எல் லீக்கில் இருந்து வெளியேறியதனை உறுதிப்படுத்தினார், மேலும் தான் தேசிய அணிக்குத் தெரிவு செய்யப்படுவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். அவருக்கு 2009/10 பருவத்திற்கான மத்திய ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

ஹாம்சயர்

[தொகு]

பிப்ரவரி 22, 2008 அன்று, இங்கில்லந்தில் உள்ள துடுப்பாட்ட அணியான ஹாம்ப்ஷயருக்காக விளையாட பாண்ட் கையெழுத்திட்டார். பாண்ட் நான்கு போடிகளில் விளையாடி 19 இலக்குகளைக் கைப்பற்றினார். முதல் போட்டியில் இவர் 66 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஆரு இலக்குகளைக் கைப்பற்றினார்.

சர்வதேச போட்டிகள்

[தொகு]

சனவரி 26, 2002 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் 10 ஓவர்கள் வீசி 25 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. பின் துடுப்பாட்ட உலகக்கிண்னத் தொடரில் இதே அணிக்கு எதிராக 10 ஓவர்கள் வீசி 23 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 6 இலக்குகளைக் கைப்பற்றினார். ஆத்திரேலிய அணிக்கு எதிராக நியூசிலாந்து பந்துவீச்சாளரின் சிறந்த பந்துவீச்சாக இது உள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக்

[தொகு]

சனவரி 2010 ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது பருவகாலத்தில் இவரை ஏலத்தில் எடுப்பதற்கு பல அணிகளிடையே கடும்போட்டி நிலவியது. பின் இவரை சாருக் கான் உரிமையாளராக உள்ள கொல்கத்தா நைட்ரடர்ஸ்  அணி நிராவாகம் இவரை 750,000 அமெரிக்க டாலர் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது.

சான்றுகள்

[தொகு]
  1. "Bond named New Zealand Bowling Coach". Wisden India. 18 October 2012 இம் மூலத்தில் இருந்து 26 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131226030114/http://www.wisdenindia.com/cricket-news/bond-named-zealand-bowling-coach/31267. 
  2. "Shane Bond quits Test cricket | Cricket | ESPN Cricinfo". Cricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2017-07-14.
  3. "The best of Bond". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 March 2017.
  4. Top 10 World’s Fastest Deliveries in the Cricket History பரணிடப்பட்டது 2012-12-31 at the வந்தவழி இயந்திரம். Retrieved 6 January 2013.
  5. Bond decides to go under the knife. Cricinfo, retrieved 28 March 2008
  6. "Brief but brilliant". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 March 2017.
  7. Bond's New Zealand days appear over. Cricinfo, retrieved 28 March 2008
  8. New Zealand terminate Bond contract. Cricinfo, retrieved 27 March 2008
  9. "Bond available for New Zealand | Cricket | ESPN Cricinfo". 2009-06-20. பார்க்கப்பட்ட நாள் 2017-07-14.
  10. "Shane Bond retires from all cricket". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. 14 May 2010. பார்க்கப்பட்ட நாள் 15 May 2010.
  11. "Best Test career strike rates". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 6 April 2008.

வெளியிணைப்புகள்

[தொகு]