உருவாக்குனர் | ஷேர் இட் தொழில்நுட்ப நிறுவனம் |
---|---|
தொடக்க வெளியீடு | 2015 |
அண்மை வெளியீடு | வார்ப்புரு:Multiple releases |
இயக்கு முறைமை | ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், மேக் ஓ எஸ், விண்டோசு |
கிடைக்கும் மொழி | ஆங்கிலம் உள்ளிட்ட 39 மொழிகள் |
உரிமம் | கட்டணமில்லை |
இணையத்தளம் | www |
ஷேர் இட் (SHAREit) என்பது ஏப்ரல் 2017 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட ஷேர் இட் லிமிடெட் தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் மென்பொருள் ஆகும். மைக்கேல் கியு இதன் தலைமை செயற்குழு அதிகாரியாவார்.[1] இந்த நிறுவனத்தின் மென்பொருளின் மூலம் படங்கள், நிகழ்படங்கள், ஒலி , தொடர்புகள், செயலி போன்றவற்றை திறன்பேசி மற்றும் கனிணி மூலமாக மற்றொரு திறன்பேசி மற்றும் கனிணிகளுக்கு அனுப்ப இயலும். மேலும் இதனை விண்டோசு இயங்குதளம், விண்டோசு திறன்பேசி, ஆண்ட்ராய்டு இயங்குதளம், ஐஓஎஸ் போன்ற இயங்குதளங்களில் பயன்படுத்தலாம்.[2] தற்போது ஆங்கிலம், இந்தி, இசுப்பானியம், பிரஞ்சு,உருசிய மொழி, அரேபியம் மற்றும் சீன மொழி உள்ளிட்ட 39 மொழிகளில் இந்த மென்பொருள் தற்போது பயன்படுத்தப்படுகிறது.[3]
சர்வதேச அளவில் 1.5 பில்லியன் பயனாளர்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர்.[4] மேலும் கடந்த பத்து ஆண்டுகளாக கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கமாகும் மென்பொருட்களின் முதல் பத்து இடங்களுக்குள் இது உள்ளதாக அப்பன்னி தெரிவித்துள்ளது. [5]
மே 8, 208 இல் இந்த நிறுவனம் பாஸ்ட்பிலிம்ஸ் எனும் செயலியினை கையகப்படுத்தி அதன் நிறுவனரை இந்தியாவிற்கான தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்தது.[6]