ஷைலா அப்துல்லா | |
---|---|
பிறப்பு | 1971 கராச்சி, பாக்கித்தான் |
தேசியம் | அமெரிக்கர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | சாஃப்ரான் டிரீம்ஸ் |
ஷைலா அப்துல்லா ( Shaila Abdullah ; பிறப்பு 1971) ஒரு பாக்கித்தான்-அமெரிக்க எழுத்தாளராவார். இவர் வடிவமைப்பாளராகவும் உள்ளார். [1]
ஷைலா அப்துல்லா ஆங்கில மொழிக்கான பத்ராஸ் பொகாரி விருது, கோல்டன் குயில் விருது, வாசகர் பார்வை விருது, எழுதப்பட்ட கலை விருது மற்றும் ஹாப்சன் அறக்கட்டளையின் மானியம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். இவரது பியான்ட் தி கெய்ன் வால் சிறந்த புனைகதைக்கான ஜூரி பரிசைப் பெற்றது. இது நோரும்பேகா புனைகதை விருதுகளில் மிக உயர்ந்த விருதாகும். [2] [3]
இவரது புத்தகங்களில் சாஃப்ரான் டிரீம்ஸ், பியான்ட் தி கெய்ன் சவால் உட்பட குயின் இன் சர்ச் ஆஃப் எ ரெயின்போ, மை ஃப்ரெண்ட் சுஹானா, மற்றும் எ மேனுவல் ஃபார் மார்கோ ஆகிய மூன்று குழந்தைகளும் புத்தகங்கள் அடங்கும்.[4] சிறப்புத் தேவையுடைய குழந்தைகளுக்கான புத்தகங்களையும் எழுதியுள்ளார். [4]
2014 ஆம் ஆண்டின் முற்பகுதியில், வாசிங்டன் மற்றும் லீ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு ஒரு ஆய்வை நடத்தியது. அதில் சாஃப்ரான் டிரீம்ஸ்ஸிலிருந்து 3,000-வார்த்தைகளைப் படிப்பது ஒரு நபரை இனவெறியைக் குறைக்கும் என்று கண்டறிந்தனர். [5] [6] [7] [8] [9] [10] [11] இந்தப் புதினம் குடியேற்ற இலக்கியத்தின் 50 சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. [12]