![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஷோன் வில்லியம் டைட் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | டின்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 1.93 m (6 அடி 4 அங்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை விரைவு, மிதவிரைவு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்துவீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 392) | ஆகத்து 25 2005 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | சனவரி 16 2008 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 162) | பிப்ரவரி 2 2007 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | பிப்ரவரி 6 2011 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 32 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2002 - | தென் ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2010 | கலமோகன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2009–இன்று | ராஜஸ்தான் ரோயல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 16 2011 |
ஷோன் வில்லியம் டைட்: (Shaun William Tait, பிறப்பு: பெப்ரவரி 22, 1983) ஆத்திரேலியா துடுப்பாட்ட அணியின் முன்னாள் பந்து வீச்சாளர். பெட்புட் பார்க், தென் ஆத்திரேலியாவில் பிறந்த இவர் ஆத்திரேலிய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவர் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக பிக் பாஷ் லீக்கில் விளையாடினார். இவர் வலது கை விரைவு வீச்சாளர் ஆவார்.[1] மார்ச் 28, 2011 இல் 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பையோடு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்[2]. மார்ச், 2017 ஆம் ஆண்டில் அனைத்து வடிவத் துடுப்பாட்டங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[3]
பெப்ரவரி 2, 2007 இல் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 20016-07 காமன்வெல்த் பேங்க் தொடரில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[4] அந்தப் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 68 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார். எட்மன் ஜோய்ஸ் இலக்கினை முதல் இலக்காகக் கைப்பற்றினார். பின் மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் சிக்கனமாகப்பந்து வீசினார். அதில் 10 ஓவர்கள் வீசி 26 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 1 இலக்கினைக் கைப்பற்றியுள்ளார். இந்தப் போட்டியில் இவர் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசினார். ஆனால் இந்தத் தொடரில் மற்ற போட்டிகளில் விளையாடவில்லை. இந்தத் தொடரின் முடிவில் 3 இலக்கினைக் கைப்பற்றினார். இவரின் பந்து வீச்சு சராசரி 31.33 ஆகும்.[5]
பின் சேப்பல் ஹாட்லீ கோப்பைக்கான தொடரில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் ஆத்திரேலிய விளையாடும் அணியில் இவர் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.[6] இந்தத் தொடரின் இறுதி இரண்டு போட்டிகளில் இவர் விளையாடினார். இந்தத் தொடரில் மட்டையாளர்களே ஆதிக்கம் செலுத்தினர். இந்தத் தொடரின் இறுதியில் 2 இலக்குகளை மட்டுமே கைப்பற்றினார். வலிமையான ஆத்திரேலிய அணியினை வீழ்த்தி நியூசிலாந்து அணி தொடரை வென்றது. இந்தத் தொடரில் நியூசிலாந்து அணி இரு முறை 300 ஓட்டங்களுக்கு மேல் சேஸ் செய்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.[7]
மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் ஆத்திரேலிய அணியில் 15 பேர் கொண்ட குழுவில் இவர் இருந்தார். பிறெட் லீ காயம் காரணமாக விலகியதால் இவரின் பங்களிப்பு அதிக கவனம் பெற்றது.[8] இந்தத் தொடரின் இறுதியில் அதிக இலக்குகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் 23 இலக்குகள் எடுத்து 2 ஆவது இடம் பிடித்தார். இவரின் பந்துவீச்சு சரசரி 20.30 ஆக இருந்தது.[9][10] ஆன்டிகுவா குவாத்தமாலாவில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 10 ஓவர்கள் வீசி 41 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இவர் ஆட்டநாயகன் விருது பெற்றார்[11]. மேலும் செயிண்ட் லூசியாவில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 10 ஓவர்கள் வீசி 39 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றினார். இதுதான் இவரின் சிறந்த பந்துவீச்சாக உள்ளது.[12] மேலும் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இவர் இலக்கினைக் கைப்பற்றவில்லை.[13] ஆனால் இந்தப் போட்டியில் ஆத்திரேலிய அணி கோப்பை வென்று அதிக முறை துடுப்பாட்ட கோப்பை வென்ற அணி எனும் சாதனை படைத்தது.[14]