இயக்குபவர் | இந்திய விண்வெளி ஆய்வு மையம் |
---|---|
திட்டக் காலம் | 5 வருடம் (திட்டம்) |
விண்கலத்தின் பண்புகள் | |
செயற்கைக்கோள் பேருந்து | IMS-2 |
தயாரிப்பு | இந்திய விண்வெளி ஆய்வு மையம் |
ஏவல் திணிவு | 371 கிலோகிராம்கள் (818 lb) |
திட்ட ஆரம்பம் | |
ஏவப்பட்ட நாள் | 26 செப்டம்பர், 2016 |
ஏவுகலன் | முனைய துணைக்கோள் ஏவுகலம்-C35 |
ஏவலிடம் | சதீஸ் தவான் விண்வெளி மையம் |
சுற்றுப்பாதை அளபுருக்கள் | |
Reference system | புவி மைய வட்டப்பாதை |
சுற்றுவெளி | புவிக்கு கீழே 720 கி.மீ தொலைவில் |
சுற்றுக்காலம் | 100 நிமிடங்கள் |
ஸ்க்காட்சாட்-1 (SCATSAT -1) ஓர் சிறிய செயற்கைக்கோள் ஆகும். இது வானிலை முன்னறிவிப்பு, சூறாவளி கணிப்பு, மற்றும் கண்காணிப்பு சேவைகளை இந்தியாவிற்கு வழங்குகிறது.
இது பெங்களூருவின் இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தால், இந்திய விண்வெளி ஆய்வு மைய செய்மதி நடுவத்தில் உருவாக்கப்பட்டது. இதன் செயல்திறன் அகமதாபாத், விண்வெளிப் பயன்பாடுகள் மையம் மூலம் உருவாக்கப்பட்டது. ஓசன்சாட்-2 செயற்கைகோள் நான்கரை ஆண்டுகள் அதன் வாழ்நாள் கழித்த பின்னர் செயலிழப்பு ஆனது. புயல் முன்னறிவிப்பு மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆகியவற்றைப் பற்றி அறிய நாசாவின் ஐ.எஸ்.எஸ்-ராப்பீடு ஸ்க்காட்யை இந்தியா நம்பியிருந்தது.[1] இந்த சிறிய செயற்கைகோள் மூலம் உருவாக்கப்பட்ட தரவு நாசா NASA, EUMETSAT மற்றும் NOAA பயன்படுத்தப்படும். இது ஒரு சிறிய செயற்கைகோள் ஆகும்.
செயற்கைக்கோளின் முதன்மை செயல்திறன் சிதறடிமீட்டர் ஆகும். இது ஓசன்சாட்-2 போல ஒத்த செயல்திறன் உடையதாகும். சிதறியின் எடை 110 கிலோ ஆகும். இதன் மூலம் சாத்தியமான புயல் மற்றும் சூறாவளிகளின் உருவாக்கத்தை கணிக்க முடியும். கடல்களில் காற்று சுழற்சியின் வைத்து இது தீர்மானிக்கப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் காற்றின் வேகத்தையும் அதன் திசையையும் கடல்மீது அளவிடுகிறது. இதன் மூலம் 4-8 நாட்களுக்கு முன்பே, புயல் உருவாக்குவதை கணிக்க முடியும். உயிர்களை காப்பாற்ற இந்த காலப்பகுதி மிகவும் முக்கியமாகும். இந்த ஓசன்சாட்-2, அக்டோபர் 2013 ல் ஒரிசா கரையோரத்தில் பைலின் புயல் உருவாகுவதை துல்லியமாக கணித்துள்ளது.
இஸ்ரோவின் விண்வெளி பயன்பாடுகள் மையம் பொறுப்பேற்று உருவாக்கியுள்ளது. ஸ்க்காட்சாட்-1 உண்மையான உற்பத்தி செலவில் 60% மற்றும் மிக குருகிய காலத்திலேயே கட்டமைக்கப்பட்டது.[2] இது மற்ற செயற்கைக்கோள் பயணத்திட்டங்களின் எஞ்சிய பகுதிகளை பயன்படுத்தி கட்டப்பட்டது.[3]
இஸ்ரோ முதன் முதலில் பல எரிக்கப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பி.எஸ்.எல்.வி-C35 செயற்கைக்கோளை செப்டம்பர் 26, 2016 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.[4] மீச்சிரு செயற்கைக்கோள்களான அல்சட் -1B(AlSat-1B), அல்சட்-2 பி(AlSat-2B) மற்றும் பாத்ஃபைண்டர் -1(Pathfinder-1), மற்றும் மீநுண் செயற்கைக்கோள்களான ஆல்சன்-1N(AlSat-1N), என்எல்எஸ் -19(NLS-19), பிசாட்(PISat) மற்றும் பிரதம்(Pratham) ஸ்காட்சாட் -1(Scatsat-1) உடன் இணைந்து ஏவப்பட்டது.[5] பி. எஸ். எல். வி திட்டத்தில் இதுவே மிகப்பெரிய திட்டம் ஆகும்.