ஸ்டார் மா | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | 2002 |
உரிமையாளர் | ஸ்டார் இந்தியா |
பட வடிவம் | 1080i உயர் வரையறு தொலைக்காட்சி (downscaled to letterboxed 576i for the SDTV feed) |
கொள்கைக்குரல் | அதே பிணைப்பு ... புதிய உத்வேகம் ... అదే బంధం... సరికొత్త ఉత్తేజం.... |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
தலைமையகம் | ஹைதராபாத், தெலுங்கானா |
முன்பாக இருந்தப்பெயர் | மா தொலைக்காட்சி (2002-2017) |
துணை அலைவரிசை(கள்) |
ஸ்டார் மா என்பது ஐதராபாத்தினை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தெலுங்கு மொழித் தொலைக்காட்சி நிறுவனமாகும். கிபி 2002 ஆம் ஆண்டு பென்மத்ச முரளி கிருஷ்ணம் ராஜூ அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. தெலுங்கில் மா என்றால் நம்முடைய என்று பொருள் தரும். நம்முடைய தொலைக்காட்சி என்ற பொருளில் மா தொலைக்காட்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் மா மியூசிக், மா கோல்டு, மா மூவிசு என்ற பிற தொலைக்காட்சிகளையும் ஒளிபரப்புகின்றனர்.
2017ஆம் ஆண்டு மா தொலைக்காட்சி ஸ்டார் இந்தியா மற்றும் வால்ட் டிஸ்னி கம்பெனி இந்தியா போன்ற நிறுவனங்களுக்கு சொந்தமாக்கி ஸ்டார் மா என்ற பெயரில் பெயர் மாற்றம் பெற்று தனது சேவையை வழங்கி வருகின்றது.[1][2][3][4]