ஸ்டெஃபனி டெய்லர் (Stafanie Taylor, பிறப்பு: சூன் 11 1991), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். ஜமைக்காவில் பிறந்த இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 49 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 33 இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008 - 2011 ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
இது துடுப்பாட்டக்காரர்கள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |