ஸ்ரீலீலா (Sreeleela; பிறப்பு: சூன் 14, 2001) என்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு அமெரிக்க நடிகை ஆவார். இவர் முக்கியமாக கன்னடம், தெலுங்கு திரைப்படங்களில் தோன்றுகிறார். இவர் 2019 இல் 'கிஸ்' என்கிற கன்னடமொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், சிறந்த பெண் நடிகைக்கான விருதை தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளில் வென்றார். இவர் 2021 இல் பெல்லி சாண்டாடி என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரைத்துறையில் அறிமுகமானார். 2022 ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடி நகைச்சுவைத் திரைப்படமான "தமகா" திரைப்படத்திலும் நடித்துள்ளார். 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் சுகந்தா, ஆதிகேசவா, எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேன் மற்றும் குண்டூர் காரம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஸ்ரீ லீலா சூன் 14, 2001 அன்று [1][2] அமெரிக்காவில் தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தார். இவர் பெங்களூரில் வளர்க்கப்பட்டார்.[3][4] இவரது தாயார் ஸ்வர்ணலதா, பெங்களூரில் மகளிர் மருத்துவ நிபுணர் ஆவார்.[5] ஸ்வர்ணலதா தொழிலதிபர் சூரபனேனி சுபாகர ராவை மணந்தார். இவர்கள் இருவரும் பிரிந்த பிறகு ஸ்வர்ணலதாவுக்கு ஸ்ரீலீலா பிறந்தார்.[4][6]
லீலா சிறுவயதிலேயே பரதநாட்டிய நடனப் பயிற்சியைத் தொடங்கினார். இவர் ஒரு மருத்துவராக ஆசைப்படுகிறார்.[2] 2021 இல் இவர் தனது மருத்துவ படிப்பின் இறுதி ஆண்டில் இருந்தார்.[7]
பிப்ரவரி 2022 இல், லீலா இரண்டு ஊனமுற்ற குழந்தைகளைத் தத்தெடுத்தார்.[8]
இயக்குநர் ஏ.பி. அர்ஜுன், ஒளிப்பதிவாளர் புவன் கவுடாவால் எடுக்கப்பட்ட லீலாவின் படங்களை சமூக ஊடகங்களில் பார்த்து, 2019 ஆம் ஆண்டு வெளியான கிஸ் திரைப்படத்தில் இவரை நடிக்க வைத்தார். தெலுங்குத் திரைப்படத்துறையில் தொடர்புகள் இருந்தும், பெங்களூரில் வளர்ந்ததால் கன்னட மொழிப் திரைப்படங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கத் தேர்ந்தெடுத்ததாக இந்த நடிகை கூறியுள்ளார்.[9]
கிஸ் படத்தின் படப்பிடிப்பு 2017 இல் தொடங்கியது, லீலா தனது பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பின் முதல் ஆண்டில் இருந்தார்.[2] இப்படம் 2019 இல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.[10]தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் நிருபரான ஏ. சாரதா என்பவர், லீலா தன்னம்பிக்கையுடன் அறிமுகமானார், "ஸ்ரீலீலா ஸ்டைலாகத் தெரிகிறார் மற்றும் சமமான கவனத்தைப் பெறுகிறார்" என்று எழுதினார்.[11]டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சகர் வினய் லோகேஷ், லீலா தனது பாத்திரத்தில் பிரகாசித்ததாகக் கூறி தன் உணர்வை எதிரொலித்தார்.[12] ஒரு மாதம் கழித்து, ஸ்ரீமுரளிக்கு ஜோடியாக அவரது இரண்டாவது படமான பாரதே வெளியானது.[13]தி நியூஸ் மினிட்டிற்காக தனது நடிப்பை மதிப்பாய்வு செய்து அரவிந்த் ஸ்வேதா எழுதினார்: அதில், "லீலா நன்றாக தன் நடிப்புத் திறனை திரையில் வெளிப்படுத்துகிறார். முன்னிலையில் உள்ள ஸ்ரீ முரளியுடன் சேர்ந்து நடிக்கும்போது தனக்கென இருக்கும் கதாபாத்திரத்தில் தனித்து நிற்கிறாள்." என்று குறிப்பிட்டுள்ளார்.[14]தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சாரதா, "இது ஸ்ரீலீலாவின் இரண்டாவது படம், மேலும் அவர் கேமரா முன் இருப்பது வசதியாக இருப்பது போல் தெரிகிறது, மேலும், அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் கோருவதை வழங்குகிறது." என்று தெரிவித்துள்ளார்.[15]