ஸ்வஸ்திகா முகர்ஜி স্বস্তিকা মুখোপাধ্যায় | |
---|---|
பிறப்பு | 13 திசம்பர் 1980 (அகவை 43) கொல்கத்தா |
படித்த இடங்கள் |
|
பணி | நடிகர் |
ஸ்வஸ்திகா முகர்ஜி (Swastika Mukherjee, வங்காள மொழி: স্বস্তিকা মুখোপাধ্যায়, பிறப்பு: திசம்பர் 13, 1979) என்பவர் ஓர் இந்திய வங்காள நடிகை ஆவார். இவர் முக்கியமாக வங்காளம், இந்தி மொழி திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் நடிக்கிறார். இவர் நடிகர் சந்து முகோபாத்யாயின் மகள் ஆவார்.[1][2]
முகர்ஜி வங்காள தொலைக்காட்சித் தொடரான தேவதாசி மூலம் நடிப்புலகில் அறிமுகமானார். அதன் பின்னர், ஹேமந்தர் பாக்கி (2001) மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இவரது முதல் முன்னணிப் பாத்திரத்தை மஸ்தான் (2004) திரைப்படத்தில் நடித்தார். மும்பை கட்டிங் (2008) திரைப்படம் மூலம் இந்தி திரைப்படத்துறையில் அறிமுகமானார்.
தனது குழந்தைப் பருவத்தில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார்.[3][4] மேரி பாபின்ஸ், த சவுண்ட் ஆப் மியூசிக், சிட்டி சிட்டி பேங் பேங் ஆகியவை இவருக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களாகும். கொல்கத்தாவின் கார்மல் பள்ளி, புனித தெரசாஸ் மேல்நிலைப் பள்ளி மற்றும் கோகலே நினைவுப் பள்ளி ஆகிய பள்ளிகளில் இவர் கல்வி கற்றார்.[5]