ஹக் ட்ரம்பிள் (Hugh Trumble 19 மே 1867 - 14 ஆகஸ்ட் 1938 [1] ) ஒரு முன்னாள் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஆவார். 1890 மற்றும் 1904 க்கு இடையில் ஒரு பன்முக வீரராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார் . இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் தலைவராக இருந்தார். அந்த இரண்டு போட்டிகளில் இரண்டையும் வென்றார். டிரம்பிள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 141 இழப்புகளைக் கைப்பற்றினார். இவர் ஓய்வுபெற்ற நேரத்தில் இது ஒரு உலக சாதனையாகக் கருதப்பட்டது.இவரது பந்துவீச்சு சராசரி 21.78 ஆகும்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இரண்டு முறை மும்முறை இழப்புகளைக் கைப்பற்றிய நான்கு துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராவார். இவர் 1897 ஆம் ஆண்டில் சிறந்த விசுடன் துடுப்பாட்ட வீரராகத் தேர்வானார். 2004 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார்.
டிரம்பிள் 1867 ஆம் ஆண்டில் விக்டோரியாவின் கோலிங்வுட் நகரின் உள் மெல்போர்னில் பிறந்தார். வடக்கு அயர்லாந்தில் பிறந்த வில்லியம் மற்றும் ஸ்காட்டிஷ் நாட்டைச் சேர்ந்த எலிசபெத் (நீ கிளார்க்) ஆகியோரின் மகனாகப் பிறந்தார்.[1][2] இவரது மூத்த சகோதரர் ஜான் ஆஸ்திரேலியாவுக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடினார் மற்றும் இவரது தம்பி தாமஸ் ஒரு அரசு ஊழியராக இருந்தார். இவர் 1918-27 வரை பாதுகாப்புத் துறையின் செயலாளராக பணியாற்றினார்.[3] பின்னர் ஆஸ்திரேலியாவின் உயர் ஸ்தானிகரின் அதிகாரப்பூர்வ செயலாளராக இருந்தார்.
டிரம்பிள் தனது ஆரம்ப வாழ்க்கையின் ஒரு பகுதியை மேற்கு விக்டோரியன் நகரமான அராராட்டில் மெல்போர்னுக்குத் திரும்புவதற்கு முன்பு கழித்தார். புறநகர் கேம்பர்வெல்லில் குடியேறினார். ஹாவ்தோர்ன் இலக்கணப் பள்ளியில் கல்வி கற்ற இவர், கியூ துடுப்பாட்ட சங்கத்திற்காக தனது ஆரம்பகால துடுப்பாட்டங்களை விளையாடினார்.[4] தனது மகன்களின் துடுப்பாட்டத்தினை ஊக்குவிக்கும் வகையில் மைதானம் அமைத்துக் கொடுத்தார்.[5]
டிரம்பிள் 1887-88 ஆம் ஆண்டிற்காக மெல்போர்ன் துடுப்பாட்ட சங்கத்திற்காக விளையாடத் தேர்வானார். அந்தப் போட்டியில் இவர் 36 ஓட்டங்களை எடுத்தார். மேலும் பந்துவீச்சில் 6.77 எனும் சராசரியில் இழப்புகளை எடுத்தார்.இதே ஆண்டில் விக்டோரியா துடுப்பாட்ட அணிக்காக இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். மிடில்செக்ஸ் மட்டையாளர் ஜார்ஜ் வெர்னான் தலைமையிலான சுற்றுப்பயண ஆங்கில லெவன் அணிக்கு எதிராக விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6] ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விக்டோரியாவுக்கான இவரது முதல் போட்டி மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானத்தில் நியூ சவுத் வேல்ஸுக்கு எதிராக இருந்தது. 52 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 7 இழப்புகளைக் கைப்பற்றினார்.[7]
1899 ஆம் ஆண்டில், 31 வயதில், ட்ரம்பிள் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த 19 வயதான புளோரன்ஸ் கிறிஸ்டியனை சந்தித்து, காதலித்தார். 1902 ஆம் ஆண்டில் இந்த தம்பதி திருமணம் செய்து கொண்டனர். ஆஸ்திரேலிய துடுப்பாட்ட சுற்றுப்பயணத்துடன் ஒரு தேனிலவு சென்றார்.[8] இவரது கட்டைவிரலில் ஏற்பட்ட காயம் டிரம்பிளை துடுப்பாட்டத்தில் இருந்து சிறிது காலம் ஓய்வு பெற்றார்.[1][5] ஒன்றாக, தம்பதியருக்கு எட்டு குழந்தைகள் இருந்தன; ஆறு மகன்கள் மற்றும் இந்தத் தம்பதிக்கு ராபர்ட் எனும் ஒரு மகன், புகழ்பெற்ற இசைக்கலைஞரும் எழுத்தாளருமான இவர் தனது முதல் நூலான துடுப்பாட்ட டின் பொற்காலம் என்பதனை தனது தந்தைக்கு அர்ப்பணித்தார். டிரம்பிள் 71 ஆம் வயதில் மாரடைப்பினால் இறந்தார் .[9]