ஹக்கீம் அஜ்மல் கான் | |
---|---|
![]() | |
இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் | |
பதவியில் 1921–1922 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 150px 11 பெப்ரவரி 1868 தில்லி,இந்தியா |
இறப்பு | 29 திசம்பர் 1927 தில்லி,இந்தியா | (அகவை 59)
இளைப்பாறுமிடம் | 150px |
பெற்றோர் |
|
பணி | கல்வியாளர்,மருத்துவர், அரசியல்வாதி, கவிஞர் |
ஹக்கீம் அஜ்மல் கான் (Hakim Ajmal Khan) என்று அழைக்கப்படும் முகமது அஜ்மல் கான் (11 பிப்ரவரி 1868 - 29 டிசம்பர் 1927) இந்தியாவின் டெல்லியில் ஒரு மருத்துவராகவும், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் நிறுவனர்களில் ஒருவராகவும் இருந்தார். டெல்லியின் கரோல் பாக் நகரில் அமைந்துள்ள ஆயுர்வேத மற்றும் யுனானி திபியா கல்லூரி, என்றழைக்கப்படும் திபியா கல்லூரியையும் அவர் நிறுவினார். 1920 இல் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் முதல் அதிபராக ஆனார், 1927 இல் அவர் இறக்கும் வரை பதவியில் இருந்தார்.[1] ஹக்கீம் அஜ்மல் கான் பிறந்த தினம் தேசிய யுனானி மருத்துவ தினமாக கொண்டாடப்படுகின்றது.[2] 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக பதவி வகித்தார்.
பிப்ரவரி 11, 1868 இல் (17 ஷவ்வால் 1284) ஹக்கீம் அஜ்மல் கான் பிறந்தார். முகலாயப் பேரரசர் பாபரின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு வந்த ஒரு புகழ்பெற்ற மருத்துவர்களின் குடும்பத்தில் பிறந்தவர். அவரது குடும்பத்தினர் அனைவரும் யுனானி மருத்துவர்கள் (நாட்டிற்கு வந்ததிலிருந்து இந்த பண்டைய மருத்துவ முறையை கடைப்பிடித்தவர்கள் - ஹக்கீம்கள் என இவர்கள் அழைக்கப்பட்டனர்). இவரது தாத்தா ஹக்கீம் ஷெரீப் கான் முகலாயப் பேரரசர் ஷா ஆலமுக்கு மருத்துவராக இருந்தார்.[3] இவரது தாத்தா யுனானி மருத்துவத்தை கற்பிக்கும் ஒரு மருத்துவ கல்லூரியையும் நடத்தி வந்தார்.
ஹக்கீம் அஜ்மல் கான் குர்ஆனை சிறுவயதிலேயே கற்றுக்கொண்டார் மேலும், அரபு மற்றும் பாரசீகத்தையும், இஸ்லாத்தினை சிறுவயதிலேயே கற்றார்.டெல்லியின் சித்திகி தவாக்கானாவைச் சேர்ந்த மருத்துவர் ஹக்கீம் அப்துல் ஜமீலின் கீழ் தனது யுனானி படிப்பை முடித்தார். அவரது உறவினர்கள் பலரும் நன்கு அறியப்பட்ட மருத்துவர்களாக இருந்தனர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தனது மருத்துவ கல்வியை பயின்றார். இவரது தாத்தா, நாடறிந்த பிரபல மருத்துவராக இருந்தார், அவரது ஷெரீப் மன்ஸில் எனும் மருத்துவமனை-கல்லூரியை ஏழை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்கும் சிறந்த யுனானி மருத்துவமனைகளில் ஒன்றாக அமைத்தார்.[4] ஹக்கீம் அஜ்மல் கானின் கல்வி [4]
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பட்டியல்