எளிதான நிரலாக்க மொழி | |
உருவாக்குனர் | ஸ்டிவ் கலப்னிக் |
---|---|
அண்மை வெளியீடு | 1.0 / டிசம்பர் 25, 2010 |
இயக்கு முறைமை | விண்டோஸ், லினக்ஸ், மாக் |
கிடைக்கும் மொழி | ரூபி |
உரிமம் | எம்.ஐ.டி |
இணையத்தளம் | http://hackety-hack.com/ |
ஹக்கெட்டி ஹேக் (ஆங்கில மொழி: Hackety Hack) என்பது ஒரு திறந்த மூலநிரல் (Open source) பயன்பாடு. இது மாணவர்களுக்கு அடிப்படை நிரலாக்க மொழியைப் புரிந்து கொள்ள உதவும். இதனை கொண்டு ரூபி நிரலாக்க மொழியை எளிதாக கற்று கொள்ளவும், கற்பிக்கவும் முடியும். இதற்கு எந்த அடிப்படை கணினி மொழியும் தேவை இல்லை. கக்கெட்டி மாக், விண்டோஸ் மற்றும் லினக்ஸ் என அனைத்து இயங்கு தளத்திலும் இயங்கும் வண்ணம் உருவாக்கப் பட்ட ஒரு ஊடாடும் பயிற்சியை வழங்குகிறது. இது ஸ்க்ராட்ச் (நிரலாக்க மொழி) மற்றும் அலிஸ் போன்ற வரைகலை நிரலாக்க மொழிகளுடன் தொகுதிகள் (blocks) மூலமும் கற்று கொள்ள இயலும். இது ஷோஸ் டூல்கிட்டைக் கொண்டு எளிதாகவும், விளையாட்டாகவும் வரைகலை முகப்பை வரைய உதவுகின்றது. இதனை கொண்டு மாணவர்கள் விரைவாகவும், எளிதாகவும் தங்கள் சொந்தப் பயன்பாடுகளையும், வலைதளங்களையும் உருவாக்க முடியும். மாணவர்கள் நிரலாக்க மொழியில் ஒரு வலுவான அடித்தளத்தை கொடுக்கிறது ஹேக்.[1][2][3]