ஹங்கேரிய தேன் தயாரிப்பானது (Honey production in Hungary) ஹங்கேரியின் உணவு வழங்கலில் முதன்மைப் பங்கு வகிக்கிறது. மேலும் நாட்டில் உள்ள உள்ளூர் தொழிற்துறையிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகப்பெரிய இயற்கைத் தேன் உற்பத்தியாளர்களில் ஹங்கேரி ஒன்றாகும்.[1] 2005 ஆம் ஆண்டில் 19.7 ஆயிரம் டன் உற்பத்தி செய்யப்பட்டது.[2]
நாடு முழுவதும் மொத்தமாக சுமார் 15,000 தேனீ வளர்ப்பவர்கள் உள்ளனர்,[3] கண்டத்தில் முக்கியமான தேன் ஏற்றுமதியாளராக உள்ளது, ஆனால் நாட்டின் இயற்கை தேனில் 5 ஆயிரம் டன் உள்நாட்டிலேயே நுகரப்படும். ரோபினியா போலிடோசிசிய மலர்த் தேனை தயாரிப்பதில் ஹங்கேரி குறிப்பிடத்தக்கது[4] பில்கிளேட் மலர் உள்ளிட்ட மற்ற மலர்கள் மகரந்தச் சேர்க்கையும் குறிப்பிடத்தக்கவை.[3] மற்ற ஹங்கேரிய தேன் சூரியகாந்தி [5]மற்றும் பழ மரங்களிலிருந்து கிடைக்கின்றது.