![]() திருவிழாவின் போது நடனமாடும் ஹஜோங் பெண்கள் | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
79,800[1] (2011) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
![]() | 71,800 |
![]() | 8,000 |
மொழி(கள்) | |
ஹஜோங் மொழி | |
சமயங்கள் | |
இந்து சமயம், Dyaoism | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
போடோ மக்கள், காரோ மக்கள் |
ஹஜோங் மக்கள் (Hajong people) வடகிழக்கு இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள் ஆவார். [2]இம்மக்கள் ஹஜோங் மொழியைப் பேசுகின்றனர். ஹஜோங் மக்களில் பெரும்பான்மையினர் இந்து சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இம்மக்கள் மேகாலயாவில் உள்ள காரோ மலைத் தொடர்களில் நெல் வேளாண்மை செய்கின்றனர்.[3]
இட ஒதுக்கீடு சலுகைக்காக இம்மக்களை இந்திய அரசு பட்டியல் பழங்குடியினர் வகுப்பில் சேர்த்துள்ளனர்.[4]இம்மக்கள் மேகாலயா மாநிலத்தின் நான்காவது பெரிய பழங்குடி மக்கள் ஆவார். [5]