ஹன்சா மாவட்டம்

ஹன்சா மாவட்டம்
ضلع ہنزہ
மாவட்டம்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் வரைபடத்தில் ஹன்சா மாவட்டம் (சிவப்பு நிறத்தில்)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் வரைபடத்தில் ஹன்சா மாவட்டம் (சிவப்பு நிறத்தில்)
நாடு பாக்கித்தான்
பிரதேசம் ஜில்ஜிட்-பால்டிஸ்தான்
தலைமையிடம்ஆலியாபாத்
அரசு
 • வகைமாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்10,109 km2 (3,903 sq mi)
மக்கள்தொகை
 (2017)
 • மொத்தம்50,000
தாலுகாக்கள்2

ஹன்சா மாவட்டம் (Hunza District), இந்தியக் காஷ்மீரின் வடக்கில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம் ஆலியாபாத் நகரம் ஆகும். 2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 10,109 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 50,000 ஆகும். [2]இம்மாவட்டட மக்கள் புருஷ்சாகி மொழி, ஷீனா மொழி மற்றும் வாக்கி மொழிகள் பேசுகின்றனர்.

அமைவிடம்

[தொகு]

ஹன்சா மாவட்டத்தின் வடக்கிலும், கிழக்கிலும் சீனாவின் கஷ்கர் பகுதியும், தெற்கில் நாகர் மாவட்டம் மற்றும் சிகார் மாவட்டம், மேற்கில் கீசெர் மாவட்டம், வடமேற்கில் ஆப்கானிஸ்தானின் வக்கான் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் காரகோரம் மலைத்தொடர்களும், பல கணவாய்களும் கொண்டது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

ஹன்சா மாவட்டம் ஆலியாபாத் மற்றும் கோஜல் என இரண்டு தாலுகாக்கள் கொண்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dividing governance: Three new districts notified in G-B - The Express Tribune". The Express Tribune (in அமெரிக்க ஆங்கிலம்). 25 July 2015. பார்க்கப்பட்ட நாள் 2016-03-10.
  2. Hunza District population census 2017

உசாத்துணை

[தொகு]

36°34′N 75°06′E / 36.567°N 75.100°E / 36.567; 75.100