ஹமீதுல்லாஹ் கான் | |
---|---|
நவாப் ஹமீதுல்லாஹ் கான், போபாலின் கடைசி அரசர் | |
போபால் நவாப் | |
ஆட்சிக்காலம் | 20 ஏப்ரல் 1926 – 1 ஜூன் 1949 |
முடிசூட்டுதல் | 9 ஜூன் 1926 |
முன்னையவர் | கைகுஸ்ரா ஜகான், போபாலின் பேகம் |
பின்னையவர் | அரசாட்சி முடிவுக்கு வந்தது, போபால் மாநிலம் உருவாக்கபட்டது |
போபாலின் நவாப் | திதுளர் போபாலின் நவாப் | |
Pretendence | 1 ஜூன் 1949 – 4 பிப்ரவரி 1960 |
பின்னையவர் | சாஜிதா சுல்தான் |
பிறப்பு | 9 செப்டம்பர் 1894 |
இறப்பு | 4 பெப்ரவரி 1960 | (அகவை 65)
தாய் | கைகுஸ்ரா ஜகான், போபாலின் பேகம் |
ஹஜ்ஜி நவாப் ஹபீஸ் சர் ஹமீதுல்லாஹ் கான் (செப்டம்பர் 9, 1894 - பிப்ரவரி 4, 1960) ஓர் போபாலின் கடைசி நவாப் ஆவார். இவரது இராஜ்யத்தின் சில பகுதிகள் 1956 ஆம் ஆண்டில் மத்திய பிரதேச மாநிலத்துடன் இணைந்தன. 1926 ஆம் ஆண்டு முதல் இவரது தாயார் பேகம் கைகுஸ்ராவ் ஜஹான் பேகம் இவருக்கு ஆதரவை விலக்கியது வரை 1949 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். 1960 ஆம் ஆண்டில் இவர் இறக்கும் வரை கெளரவமான பட்டத்தை வகித்தார்.
லண்டனில் நடந்த வட்ட மேஜை மாநாட்டின் பிரதிநிதியாக இவர் இருந்துள்ளார். இந்தியா சுதந்திரம் அடையும் வரை 1944-1947 வரை சேம்பர் ஆஃப் பிரின்சஸின் அதிபராகப் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போரின் போது இவர் கெரென் போர் மற்றும் இரண்டாம் அல்-அலமைன் சண்டை ஆகியவற்றில் கலந்து கொண்டார். இவர் பாகிஸ்தானின் நிறுவனர் முஹம்மது அலி ஜின்னாவிற்கு மிகவும் நெருக்கமானவர். மேலும் வைஸ்ராய் மற்றும் இந்திய கவர்னர் ஜெனரல் லூயிஸ் மவுண்ட்பேட்டனுடனும் இவர் நல்லுறவைக் கொண்டிருந்தார். ஜின்னாவின் அழுத்தம் இருந்தபோதிலும், போபாலை இந்திய ஒன்றியத்தின் ஒரு பகுதியாகக் கொண்டுவர இவர் தயக்கமின்றி ஒப்புக்கொண்டார். [1] இவரது மரணத்திற்குப் பிறகு இவருக்கு மகன்கள் எவரும் இல்லாததினால் இவருக்குப் பிறகு இவரது இரண்டாவது மகள் சாஜிதா சுல்தான், போபாலின் பேகம் ஆக நியமிக்கப்பட்டார். [2]
நவாப் ஹமீதுல்லாஹ் கான் 1905 ஆம் ஆண்டில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் படித்தார். மற்றும் அலகாபாத் பல்கலைக்கழகம் சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.[3]
1925 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 அன்று பெஷாவரில், நவாப் ஹமீதுல்லா கான் ஆப்கானிஸ்தானின் ஷா சுஜாவின் பேத்தியான மைமூனா சுல்தான் ஷா பானு பேகம் சாஹிபாவை (1900-1982) மணந்தார். இந்த தம்பதியருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
1947 ஆம் ஆண்டில், இவர் ஒரு உள்ளூர் போபால் முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த அப்தாப் ஜஹான் பேகம் சாஹிபாவை (1919-2002) மணந்தார். இந்த தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார்.
இவர் 1930 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்தார். [4]
(ரிப்பன் பட்டி, இன்று பார்ப்பது போல்; முழுமையற்றது)
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)