ஹம்ச நந்தினி | |
---|---|
60வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் ஹம்ச நந்தினி | |
பிறப்பு | பூனம் பர்தக்[1] புனே, மகாராட்டிரம், இந்தியா |
பணி | நடிகை, வடிவழகி |
செயற்பாட்டுக் காலம் | 2004–present |
ஹம்சா நந்தினி (பிறப்பு பூனம் பர்தக் ) ஓர் இந்திய வடிவழகியும், நடனக் கலைஞரும், தெலுங்கு நடிகையும் ஆவார்.[2][3]மாஸ்டார்ஸ் இதழ், பிரபலங்கள் கிரிக்கெட் கழகம் ஐதராபாத்து இன்டர்நேஷனல் ஃபேஷன் வீக் 2011, 2013 போன்றவற்றின் விளம்பரங்களில் இடம் பெற்றுள்ளார்.[4] தனது பூனம் என்ற தனது இயற்பெயரில் சில படங்களில் தோன்றினார். ஆனால் திரையுலகில் பூனம் என்ற பெயரில் அதிகமானவர்கள் இருந்ததால், இயக்குனர் வம்சி இவருக்கு ஹம்ச நந்தினி என்று பெயர் சூட்டினார்[5] 2015 இல் தெலுங்கு வரலாற்று ருத்ரமாதேவியில் போர் இளவரசி மதனிகாவாக நடித்தார். தற்போது முக்கியமாக தெலுங்கு திரையுலகில் குத்தாட்டப் பாடல்களில் தோன்றுகிறார்.[6]
ஹம்ச நந்தினி புனேவில் பிறந்து வளர்ந்தவர். பின்னர் வடிவழகியாக மாற மும்பை சென்றார்.[5] 2002 முதல் விளம்பரத் துறையில் இருந்து வருகிறார், மேலும் மாஸ்டார்ஸ் இதழ், செலிபிரிட்டி கிரிக்கெட் லீக், ஐதராபாத் இன்டர்நேஷனல் ஃபேஷன் வீக் 2011 & 2013 மற்றும் பல்வேறு தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். வணிகத்தில் பட்டம் பெற்ற இவர் 2009 இல் மனித வளத்தில் முதுகலை படிப்பில் சேர்ந்தார்.[4][5]
2013 இல், மிர்ச்சி\',[7]பாய்,[8]பாய்,[9] அத்தாரிண்டிகி தாரேதி மற்றும் ராமய்யா வஸ்தவய்யா போன்ற படங்களில் இடம் பெற்ற குத்தாட்டப் பாடல்களில் இடம்பெற்றார்.[10] "ஒரு ஐந்து நிமிட நடனம்" தனக்கு "அற்புதமான வெளிப்பாடு " மற்றும் "மக்களை சென்றடைவதற்கான ஒரு நல்ல தளத்தை" தருவதால், மகிழ்ச்சியாக இருப்பதாக கூறுகிறார்.[11] 2014இல் வெளியான லெஜண்ட் படத்தில் நடித்தார்.[2]