ஹரிஜன் (Harijan) (இந்தி: हरिजन ) இந்தியத் துணைக்கண்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை பகவான் ஹரியின் குழந்தைகள் என்று மகாத்மா காந்தி அழைத்தார்.[1] ஆனால் ஹரிஜன் என்ற சொல் தங்களை அவமதிப்பதாக சில தலித் இயக்கத்தினர் கருதினர்.[2][3] இதனால் இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளும் தலித்துகளை, ஹரிஜனங்கள் எனக் குறிப்பதை நிறுத்திக் கொண்டது.[4]
பிரித்தானிய ராஜ் காலத்தில் மகாத்மா காந்தி எரவாடா சிறையில் இருந்த போது 11 பிப்ரவரி 1932 முதல் ஹரிஜன் எனும் பெயர் தாங்கிய வாராந்திர செய்தித்தாளை குஜராத்தியிலும் ஆங்கில மொழியிலும் வெளியிட்டார்.[5][6] மேலும் ஹரிஜன சேவகன் எனும் வாராந்திர செய்தித்தாளை இந்தி மொழியிலும் வெளியிட்டார்.[7] ஹரிஜன் பத்திரிக்கை, தாழ்த்தப்பட்டோர்களின் சமூக, பொருளாதார, கல்வி பிரச்சனைகளை மையப்படுத்தி செய்திகள் வெளியிட்டது.