ஹரிதாஸ் | |
---|---|
இயக்கம் | சுந்தர் ராவ் நட்கர்ணி |
தயாரிப்பு | ராயல் டாக்கீஸ் |
கதை | இளங்கோவன் |
திரைக்கதை | இளங்கோவன் |
வசனம் | இளங்கோவன் |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | எம். கே. தியாகராஜ பாகவதர் என். எஸ். கிருஷ்ணன் பி. வி. ரங்காச்சாரி டி. ஆர். ராஜகுமாரி என். சி. வசந்தகோகிலம் டி. ஏ. மதுரம் ஹரிணி ராதாபாய் |
பாடலாசிரியர் | பாபநாசம் சிவன் |
கலையகம் | சென்ட்ரல் ஸ்டூடியோ, கோவை |
வெளியீடு | அக்டோபர் 16, 1944 |
நீளம் | 10995 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஹரிதாஸ் 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, சுந்தர ராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் 10 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
1944ம் ஆண்டு தீபாவளி அன்று (16 அக்டோபர்) சென்னை சன் தியேட்டர்சில் திரையிடப்பட்ட இப்படம் அதே திரையரங்கில் 784 நாட்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது. 1946 தீபாவளி நாள் (22 நவம்பர்) வரை தொடர்ந்து ஓடியது. பிற திரையரங்குகளையும் சேர்த்து மொத்தம் 133 வாரங்கள் ஓடியது.[1][2][3][4][5][6]
ஐபிஎன் லைவ் தனது எல்லாக் காலத்திற்குமான 100 சிறந்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் 'ஹரிதாசையும்' சேர்த்தது.[7] கலையகத் தொழிநுட்பவியலாளர்களால் கையால் வண்ணம் தீட்டப்பட்ட ஒரே ஒரு காட்சி தவிர ஏனையவை கருப்பு-வெள்ளைப் படமாக இது முதலில் வெளியிடப்பட்டது. 1946-இல் முழு வண்ணத்துடன் மீண்டும் வெளியிடப்பட்டது. லட்சுமிகாந்தன் கொலை வழக்கின் காரணமாக இரண்டு ஆண்டு சிறைவாசத்திற்கு முன் வெளிவந்த தியாகராஜ பாகவதரின் கடைசிப் படம் இதுவாகும்.
அரிதாஸ் (எம். கே. தியாகராஜ பாகவதர்) கம்மாளர் (பொற்கொல்லர்) குலத்தில் பிறந்த தெய்வபக்தி கொண்ட ஒரு செல்வந்தரின் மகன். தாய்தந்தையருக்கு அடங்காமல் மனைவி லட்சுமியின் (என். சி. வசந்தகோகிலம்) சொல்லுக்கு இணங்கி நடப்பவன் போல நடித்துக் கொண்டு, பிற பெண்களுடன் திரிந்து கொண்டிருந்தான். ஒரு நாள் நண்பன் ரங்கனின் (எஸ். ஆர். கிருஷ்ணய்யங்கார்) உதவியுடன் ரம்பா (டி. ஆர். ராஜகுமாரி) என்ற நடன மங்கையை சந்தித்து, வீட்டில் தாய் தந்தையர் இல்லாத நேரத்தில் அவளையும் அவளது குழுவினரையும் வீட்டிற்கு அழைத்து வந்து வெகு விமரிசையாக நடனமாட வைத்தான். மனைவி லட்சுமிக்கு ரம்பா தாசி எனத் தெரிந்து, அவளுடன் வாக்குவாதம் செய்து வெளியே துரத்துகிறாள். இதனால் அவமானமடைந்த ரம்பா தனது துட்ட நண்பர்கள் மூலம் லட்சுமியை ஒரு மரத்தில் கட்டி அடிக்க வைக்கிறாள். அவள் அரியின் தகப்பனாரால் காப்பாற்றப்படுகிறாள். துட்டர்கள் அரிதாசிடம் அவருடைய தந்தைதான் இச்சம்பவத்திற்குக் காரணம் எனச் சொல்ல, அரிதாசும் அவனது பெற்றோர்களை வீட்டைவிட்டு விரட்டுகிறான்.[8]
ரம்பையுடனான நட்பு நாளுக்கு நாள் அதிகரித்து, அரிதாஸ் குடிப்பழக்கம், சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு தனது செல்வம் அனைத்தையும் இழந்து தனது வீட்டை ரம்பைக்கு எழுதிக் கொடுக்கிறான். ரம்பா அரிதாசையும், லட்சுமியையும் வீட்டை விட்டுத் துரத்துகிறாள். இருவரும் காட்டில் தூங்குகையில், அரிதாசுக்கு நித்திரை தெளிந்தபோது, அழகான மூன்று பெண்களைக் கண்டு விசாரிக்க, அவர்கள் கங்கா, யமுனா, சரசுவதி என்றும் நாள்தோறும் மகாமுனிவரைக் (பி. பி. ரெங்காச்சாரி) கண்டு அவரது ஆசீர்வாதத்தைப் பெற்று வருவதாகவும் அவருடைய மகிமையையும் சொல்கிறார்கள். அரிதாஸ் மகாமுனிவரைக் கண்டு கோபித்து அவரை உதைக்க வர முனிவர் அவனது கால்களைத் துண்டிக்கச் செய்கிறார். அரிதாசுத் தனது தவறுகளை உணர்ந்து மன்னிப்புக் கேட்கிறான். முனிவரின் உபதேசத்தால், தாய்ந்தந்தையரே தெய்வமென அறிந்து அவர்களைச் சந்தித்து இழந்த கால்களையும் பெறுகிறான்.[8]
நடிகர்கள் | பாத்திரம் |
---|---|
எம். கே. தியாகராஜ பாகவதர் | ஹரிதாஸ் |
என். சி. வசந்தகோகிலம் | லட்சுமி (ஹரிதாசின் மனைவி) |
பி. பி. ரெங்காச்சாரி | மகாமுனிவர் |
டி. இ. கே. ஆச்சாரியா | ஹரிதாசின் தகப்பனார் |
அண்ணாஜி ராவ் | லட்சுமியின் தகப்பனார் |
எஸ். ஆர். கிருஷ்ணய்யங்கார் | கண்ணன் |
என். எஸ். கிருஷ்ணன் | ஜமீந்தார் |
பி. ஆர். ராஜகோபாலய்யர் | கிராமாதிகாரி |
பி. ராமய்யாசாஸ்திரி | செட்டியார் |
டி. ஆர். ராமசாமி | மாதவிதாஸ் |
டி. ஆர். ராஜகுமாரி | ரம்பா (தாசி) |
எம். ஏ. ராதாபாய் | ஹரியின் தாயார் |
டி. ஏ. மதுரம் | சாரதா (ரம்பாவின் சமையல்காரி) |
பேபி ஹரிணி | கிருஷ்ணன் |
இத்திரைப்படத்தில் 20 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.[8] பாபநாசம் சிவன் பாடல்களை இயற்ற, ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார்..[8]
வரிசை எண் |
பாடல் | பாடியவர்/கள் | இராகம் | தாளம் |
---|---|---|---|---|
1 | வாழ்விலோர் திருநாள் - இன்றே | எம். கே. தியாகராஜ பாகவதர் | இந்தி மெட்டு | - |
2 | மன்மத லீலையை வென்றாருண்டோ | எம். கே. தியாகராஜ பாகவதர் | சாருகேசி | ஆதி |
3 | தொட்டதற்கெல்லாம் தப்பெடுத்தாலென்ன | எம். கே. தியாகராஜ பாகவதர் | சிந்துபைரவி | ஆதி |
4 | கதிரவன் உதயம் கண்டு கமலங்கள் முகம் மலரும் | என். சி. வசந்தகோகிலம் | பிலகரி | ஆதி |
5 | கண்ணா வா மணிவண்ணா வா | என். சி. வசந்தகோகிலம் | சுத்ததன்யாசி | ஆதி |
6 | எனது மனம் துள்ளி விளையாடுதே | என். சி. வசந்தகோகிலம் | இந்தி மெட்டு | - |
7 | எந்நாளும் இந்த இன்பம் குறையாதென்று | டி. ஆர். ராஜகுமாரி, எம். கே. தியாகராஜ பாகவதர் | பைரவி | ஆதி |
8 | உலகில் எவரும் நிகரில்லையே | எம். கே. தியாகராஜ பாகவதர், டி. ஆர். ராஜகுமார் | மாண்டு | திசுரம் |
9 | போதும் வேண்டாம் விளையாட்டு | டி. ஆர். ராஜகுமாரி, எம். கே. தியாகராஜ பாகவதர் | உசேனி | ஆதி |
10 | மயில்களழகாய் பயிலும் நடமே | டி. ஆர். ராஜகுமாரி, எம். கே. தியாகராஜ பாகவதர் | அம்சத்வனி | ஆதி |
11 | உங்களை என் கண்ணாலே காண ஆசை கொண்டேனே | டி. ஆர். ராஜகுமாரி | இந்தி மெட்டு | - |
12 | மாமுனி நாதர் கருணையினாலே | எம். கே. தியாகராஜ பாகவதர் | இந்தி மெட்டு | - |
13 | என் உடல்தனிலொரு ஈ மொய்த்தபோது உங்கள் | எம். கே. தியாகராஜ பாகவதர் | யதுகுலகாம்போதி (விருத்தம்) | - |
14 | என் உயர் தவப்பயன் அம்மையே அப்பா | எம். கே. தியாகராஜ பாகவதர் | அடானா | - |
15 | அன்னையும் தந்தையும் தானே பாரில் | எம். கே. தியாகராஜ பாகவதர் | - | - |
16 | கவலையை தருவது - காரிகை செயலே | என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் | - | - |
17 | காதகி கிராதகி நான் | டி. ஆர். ராஜகுமாரி | முகாரி | - |
18 | எனதுயிர் நாதன் இருதயமும் நொந்தே | என். சி. வசந்தகோகிலம் | மாயாமாளவகௌளை | ஆதி |
19 | கிருஷ்ணா முகுந்தா முராரே | எம். கே. தியாகராஜ பாகவதர் | நவரோசு | ஆதி |
20 | நிஜமா இது நிஜமா | எம். கே. தியாகராஜ பாகவதர் | பயாகடை | ரூபகம் |