இட்லர் உமாநாத் | |
---|---|
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | பி. வி. துளசிராமன் பி.வி.டி புரொடக்சன் |
கதை | மகேந்திரன் |
திரைக்கதை | மௌலி |
இசை | ம. சு. விசுவநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் கே. ஆர். விஜயா சத்யராஜ் சுருளி ராஜன் |
ஒளிப்பதிவு | பி. என். சுந்தரம் |
படத்தொகுப்பு | தேவராஜன் |
கலையகம் | பி.வி.டி. புரோடக்சன்ஸ் |
வெளியீடு | சனவரி 26, 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இட்லர் உமாநாத் (Hitler Umanath) என்பது 1982 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். பி. மாதவன் இயக்கி, பி. வி. துளசிராம் தயாரித்த இப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, சத்தியராஜ், சுருளி ராஜன் ஆகியோர் நடித்தனர். இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைத்தார்.[1][2][3][4]
அடோல்ப் இட்லருடன் ஒத்திருக்கும் உமாநாத் விரைவில் தன்னை மிகவும் வலிமையான, ஆற்றல்மிக்க நபராக வளர்த்துக் கொள்கிறார். இட்லரின் கவர்ச்சியான ஆளுமை மற்றும் தலைமைத்துவ திறன்களைப் பற்றி அவரது மனைவி மேலும் மேலும் அவருக்கு கூறுவதால், அவர் ஒரு கவர்ச்சியான தலைவராகவும், வெற்றிகரமான தொழிலதிபராகவும் மாறுகிறார். இறுதியில், இட்லரின் தீய செயல்களைப் பற்றி அறிந்தவுடன், அத்தகைய தீய நபரைப் பின்பற்றி வாழ்நது குறித்து வருத்தப்படுகிறார்.
இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசைமயமைத்துள்ளார். அனைத்து பாடல் வரிகளையும் கண்ணதாசன் எழுதினார்.[5]