ஹெச்எஸ்ஆர் லேஅவுட் | |
---|---|
குடியிருப்பு | |
Country | India |
இந்திய மாநிலங்கள் | கருநாடகம் |
Metro | பெங்களூரு |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
வாகனப் பதிவு | KA-01,KA-51 |
ஹெச்எஸ்ஆர் லேஅவுட் என்றறியப்படும் ஓசூர் சர்ஜாப்பூர் சாலை லேஅவுட், தென்கிழக்கு பெங்களூருவில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியாகும். ஆகரா குளத்தருகில் ஓசூர் சாலைக்கும், சர்ஜாப்பூர் சாலைக்கும் நடுவில் இவ்விடம் அமைந்துள்ளது. பூங்காக்களுக்கும் தோட்டங்களுக்கும் பிரபலமான ஹெச்எஸ்ஆர் லேஅவுட் 1984-ம் ஆண்டு பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தால் உருவாக்கப்பட்டது.
ஏழு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த ஹெச்எஸ்ஆர் லேஅவுட்டானது, குறுக்கு-நெடுக்கு சாலைகளைக் கொண்டுள்ளது. ஆகரா, பரங்கைப்பாளையா, வெங்கடாபுரா, மங்கம்மாபாளையா, ஹொசப்பாளையா ஆகியவை ஹெச்எஸ்ஆர் லேஅவுட்டின் பகுதிகளாகும். இங்கு பல சிறு பூங்காக்களும் தோட்டங்களும் உள்ளன. 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜெஎஸ்எஸ் பள்ளி, [1] 1974-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆக்ஸ்போர்டு கல்லூரி, நிவ்ட் NIFT(National Institute of Fashion Technology) ஆகியவை இங்கு அமைந்துள்ளன.[2]
கோரமங்கலாவிலிருந்து 2 கிமீ தொலைவிலும், ஜெயநகரிலிருந்து 7 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
சற்றுத் தாழ்வான பகுதியாக இருப்பதால், மழைக்காலங்களில் சாலைகளில் அதிக நீர் காணப்படுகிறது.[3][4]. எலக்ட்ரானிக் சிட்டி அருகிலிருப்பதாலும், மடிவாலா அருகிலிருப்பதாலும் பெங்களூருவின் கூட்ட நெரிசல் இங்கும் உண்டு.
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)