ஹெர்ச்சல் கிப்ஸ்

ஹெர்ச்சல்ஸ் கிப்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஹெர்ச்சல்ஸ் கிப்ஸ்
உயரம்5 அடி 9 அங் (1.75 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 264)நவம்பர் 27 1996 எ. இந்தியா
கடைசித் தேர்வுசனவரி 10 2008 எ. மேற்கிந்தியத் தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 42)அக்டோபர் 3 1996 எ. கென்யா
கடைசி ஒநாபபிப்ரவரி 27 2010 எ. இந்தியா
ஒநாப சட்டை எண்09
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 90 248 193 388
ஓட்டங்கள் 6,167 8,094 13,425 11,976
மட்டையாட்ட சராசரி 41.95 36.13 42.21 35.42
100கள்/50கள் 14/26 21/37 31/60 27/62
அதியுயர் ஓட்டம் 228 175 228 175
வீசிய பந்துகள் 6 138 66
வீழ்த்தல்கள் 0 3 2
பந்துவீச்சு சராசரி 26.00 28.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 n/a
சிறந்த பந்துவீச்சு 0/4 2/14 1/16
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
94/– 108/– 176/– 170/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், திசம்பர் 3 2013

ஹெர்ச்சல்ஸ் கிப்ஸ் (Herschelle Gibbs, பிறப்பு: பிப்ரவரி 23 1974 ), தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 90 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 248 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 193 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 387 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1996 -2008 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1996 -2010 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

அனைத்துக் காலத்திற்குமான சிறந்த களத் தடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக இவர் அறியப்படுகிறார். சக நாட்டு வீரரான சான்டி ரோட்சுடன் இவர் சில சமயங்களில் ஒப்பிடப்படுகிறார். ஆனால் அவரை விட குச்சங்களைக் பார்த்து எறிவதில் கிப்ஸ் சிறந்தவர் என முன்னாள் ஆத்திரேலிய தலைவர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.[1] கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கலந்து கொண்ட முதல் தென்னாப்பிரிக்க வீரர் மற்றும் சர்வதேச அளவில் ஒன்பதாவது வீரர் எனும் பெருமை பெற்றார்.[2] இவர் 2018 ஆம் ஆண்டில் அணியில் இருந்து நீக்கப்பட்ட பிரகு இவர் தென்னாப்பிர்க்க ஆ அணியில் விளயாடியுள்ளார்.

சர்வதேச போட்டிகள்

[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டம்

[தொகு]

1996 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது .நவம்பர் 7, கொல்கத்தா ஈடன்கார்டனில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 112 பந்துகளில் 31 ஓட்டங்களை எடுத்து வெங்கடேஷ் பிரசாத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் 12 பந்துகளில் 9 ஓட்டங்கள் எடுத்து சவகல் சிறீநாத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 329 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 2008 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி சிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது சனவரி 10, டர்பனில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 22 பந்துகளில் 27 ஓட்டங்களை எடுத்து பவல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 100 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.[3]

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்

[தொகு]

1996 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி கென்யாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.அக்டோபர் 3,நைரோபில் கென்யத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரின் ஐந்தாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானர். இந்தப் போட்டியில் 22 பந்துகளில் 17 ஓட்டங்களில் எடுத்து ஒடும்பீ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 202 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[4] 2010 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. பெப்ரவரி 27 , அகமதாபாத்தில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரின் மூன்றாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 90 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[5]

சான்றுகள்

[தொகு]
  1. cricket.com.au (21 May 2017), Ponting's Top Five fielders of all time, பார்க்கப்பட்ட நாள் 27 November 2017
  2. "Latest News | cplt20". cplt20.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 19 October 2018.
  3. "Full Scorecard of South Africa vs West Indies 3rd Test 2008 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.
  4. "Full Scorecard of Kenya vs South Africa, KCA Centenary Tournament, 5th Match - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.
  5. "Full Scorecard of India vs South Africa 3rd ODI 2010 - Score Report | ESPNcricinfo.com". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.