ரெவ். டாக்டர் ஹெர்மன் குண்டர்ட் (Rev. Dr. Hermann Gundert, இசுடுட்கார்ட், 4 பிப்ரவரி 1814–25 ஏப்ரல் 1893 ஜெர்மனியின் கால்வில் ) என்பவர் ஒரு ஜெர்மானிய சமயப்பரப்புநர், அறிஞர், மொழியியலாளர் ஆவார். மேலும் இவர் ஜெர்மன் புதின எழுத்தாளரும் நோபல் பரிசு பெற்றவருமான ஹேர்மன் ஹெசேயின் தாத்தா ஆவார். குண்டெர்ட் மலையாள இலக்கண நூலான மலையாளபாஷா விகாரணம் (1859) என்ற நூலை எழுதி முடித்தார். அதில் இவர் தற்போதுய மலையாளிகள் பேச்சின் இலக்கணத்தை உருவாக்கி வரைமுறைப் படுத்தினார்; மேலும் இவர் ஒரு மலையாளம்- ஆங்கில அகராதி (1872), மலையாள மொழியில் விவிலிய மொழிபெயர்ப்புப் பணிகள் போன்றவற்றில் பங்களித்துள்ளார். இவர் முதன்மையாக இந்திய ஒன்றியத்தில் உள்ள கேரளாத்தின் மலபார் கடற்கரையில் உள்ள தலச்சேரியில் பணியாற்றினார். வரலாறு, புவியியல் வானியல் ஆகிய துறைகளிலும் குண்டர்ட் பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.[1] மலையாள மொழியில் இவர் 18 நூல்களை எழுதியுள்ளார். மலையாள செய்தித்தாளான படஷிமோதயத்தை வெளியிட்டார்.