ஹேமச்சந்திர கனுங்கோ | |
---|---|
![]() | |
பிறப்பு | ஹேமச்சந்திர தாஸ் கனுங்கோ ஆகத்து 4, 1871 இராதாநகர், மேற்கு மிட்னாபூர் , பிரித்தானிய இந்தியா[1](now in Belda, Paschim Medinipur, West Bengal, India] |
இறப்பு | ஏப்ரல் 8, 1951 மிட்னாபூர், இந்தியா | (அகவை 79)
அமைப்பு(கள்) | அனுசீலன் சமித்தி |
அறியப்படுவது | இந்திய விடுதலை வீரர் |
ஹேமச்சந்திர தாஸ் கனுங்கோ (Hemchandra Das Kanungo) (4 ஆகஸ்ட் 1871-8 ஏப்ரல் 1951) ஓர் இந்திய தேசியவாதியும் மற்றும் அனுசீலன் சமிதியின் உறுப்பினரும் ஆவார்.[2] கனுங்கோ 1907 இல் பாரிசுக்குச் சென்று நாடுகடத்தப்பட்ட உருசியப் புரட்சியாளர்களிடமிருந்து பிக்ரிக் அமிலகுண்டுகளை தயாரிக்கும் நுட்பத்தைக் கற்றுக்கொண்டார். 1908 ஆம் ஆண்டில், அலிபூர் வெடிகுண்டு வழக்கில் அரவிந்தருடன் இணைந்து குற்றம் சாட்டப்பட்டவர்களில் கனுங்கோவும் ஒருவர். இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான் சிற்றறைச் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் 1921 இல் விடுவிக்கப்பட்டார்.[3]
இராணுவ மற்றும் அரசியல் பயிற்சியைப் பெறுவதற்காக வெளிநாடு சென்ற முதல் இந்திய புரட்சியாளராக இவர் இருந்திருக்கலாம். இவர் பாரிசில் உருசியக் குடியேறியவரிடமிருந்து பயிற்சி பெற்றார்.[4] கனுங்கோ 1908 ஜனவரியில் இந்தியா திரும்பினார். கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள மணிகட்லா என்ற இடத்தில் "அனுசீலன் சமிதி" என்ற புரட்சி இயகத்தை நிறுவி இவ்வமைப்பின் உறுப்பினர்கள் 1930களின் இறுதி வரை படுகொலைகள், வெடுகுண்டு தயாரித்தல், ஆயுதப் பயிற்சி போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அதன் நிறுவனர் உறுப்பினர்களாக அரவிந்தர், பரிந்திர குமார் கோசு ஆகியோர் இருந்தனர்.[5] 1907 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஜெர்மனியின் இசுடட்கார்ட்டில் நடந்த சர்வதேச சோசலிச மாநாட்டில் பிகாய்ஜி காமா இந்திய கொடியை வெளிநாட்டு மண்ணில் முதல் முதலில், 22ஆம் நாள் அகஸ்டு 1907ல் ஜெர்மனியில் ஏற்றினார். இதில் கனுங்கோவின் பங்கும் இருந்தது.[6]
தொழில்நுட்ப அறிவை பெற கனுங்கோ ஐரோப்பாவுக்குச் சென்றார். பயணத்திற்கு பணம் ஏற்பாடு செய்வதற்காக கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டை விற்றார். 1906 ஆம் ஆண்டின் இறுதியில் மர்சேய் வந்த இவர், சுவிட்சர்லாந்து, பிரான்சு மற்றும் இங்கிலாந்தில் உள்ள புரட்சியாளர்களுடன் தொடர்பு கொள்ள சில மாதங்கள் செலவிட்டார். இறுதியாக, பாரிசில் புரட்சிக்குத் தொடர்பான ஒருவரை கண்டுபிடித்தார்.[7] 1907 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இவரது நண்பர் பாண்டுரங்க பப்பட்டும் சேர்ந்து வரலாறு, புவியியல், பொருளாதாரம், சோசலிசம், பொதுவுடைமை மற்றும் வேதியியல் ஆகியவற்றைப் படித்தனர்.
ஹேமச்சந்திரா உருசிய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட வெடிகுண்டு தயாரிக்கும் தொழில்நுட்பக் கையேட்டுடன் ஐரோப்பாவிலிருந்து நாடு திரும்பினார். பின்னர், அரவிந்தரின் வழிகாட்டலின் பேரில் யுகாந்தர் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.[3]
முசாபர்பூரின் நீதிபதி கிங்ஸ்போர்டைக் கொல்ல குதிராம் போஸ் மற்றும் பிரபுல்லா சாகி ஆகிய இருவரும் முயன்றனர். தவறான இலக்கில் குண்டுவீசி தாக்குதல் நடத்திய பிறகு, காவலர்கள் பிரபுல்லா சாகி தற்கொலை செய்து கொண்டார். குதிராம் கைது செய்யப்பட்டு இரண்டு பெண்களைக் கொலை செய்ததற்காக விசாரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார்.[8][9] ஹேமச்சந்திராவால் நிறுவப்பட்ட இரகசிய வெடிகுண்டு தொழிற்சாலை பிரித்தானிய காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு மூடப்பட்டது.
Khudiram was suspected and arrested there [at Waini station] ... Khudiram was tried ... was sentenced to death and hanged in the Muzaffarpur jail ... on 19 August 1908.