ஹேமச்சந்திர கோஸ்வாமி | |
---|---|
![]() | |
பிறப்பு | கோலாகாட் மாவட்டம், அசாம் | 8 சனவரி 1872
இறப்பு | 2 மே 1928 குவகாத்தி, அசாம் | (அகவை 56)
தொழில் | நிர்வாக அதிகாரி, எழுத்தாளர், கவிஞர், வரலாற்றாசிரியர் |
மொழி | அசாமிய மொழி |
தேசியம் | இந்தியர் |
கல்வி நிலையம் | மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா |
ஹேமச்சந்திர கோஸ்வாமி (Hemchandra Goswami) (1872-1928) ஒரு இந்திய எழுத்தாளரும், கவிஞரும், வரலாற்றாசிரியரும், ஆசிரியரும் மற்றும் நவீன அசாமிய இலக்கியத்தின் ஆரம்ப பகுதியில் பணியாற்றிய மொழியியலாளரும் ஆவார். 1920 ஆம் ஆண்டு தேஜ்பூரில் நடைபெற்ற அசாமிய இலக்கிய மன்றத்தின் நான்காவது தலைவராக இருந்தார். [1] பிரித்தானிய அசாமில் கூடுதல் உதவி ஆணையராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
கோஸ்வாமி, 1900 ஆம் ஆண்டில் கர்னல் கார்டன் என்பவரது உதவியுடன் ஹேமச்சந்திர பருவாவின் "ஹேம்கோஷ்" என்ற முதல் அசாமிய அகராதியை என்ற வெளியிட்டார். அசாமிய மொழியில் முதல் ஈரேழ்வரிப்பாவான 'பிரியதமர் அசாமிய சாகித்தியர் சானேகி, [2] புலர் சாகி (1907) 'பிரியதமர் சித்தி' (பிரியதமர் சிதி' (பிரியத்திடமிருந்து ஒரு கடிதம்), [3] காகோ அரு ஹியா. நிபிலாவ் முதலியனவற்றையும் வெளியிட்டார். 'கதா கீதை' (உரைநடையில் கீதை) 1918 இல் இவராலும், பூரணி ஆசம் புரஞ்சியாலும் திருத்தப்பட்டது. [4]