ஹேமவதி கருநாடக இசையின் 58வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண மேள பத்ததியில் இந்த மேளத்திற்கு தேசிஸிம்ஹாரவம் என்று பெயர்[ 1] [ 2]
ஹேமவதி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
திசி என்றழைக்கப் படும் 10வது சக்கரத்தில் 4வது மேளம்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2 ), சாதாரண காந்தாரம் (க2 ), பிரதி மத்திமம் (ம2 ), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2 ), கைசிகி நிஷாதம் (நி2 ) ஆகிய சுரங்கள் வருகின்றன.
திரிஸ்தாயி இராகம்.
ஜண்டை மற்றும் தாட்டு சுரப்பிரயோகங்கள் இந்த இராகத்திற்கு அழகைத் தருகின்றன.
எப்போதும் பாடத் தகுந்தது.
22வது மேளமாகிய கரகரப்பிரியாவின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
மூர்ச்சனாகாரக மேளம் . இதன் ரிஷப, காந்தார, பஞ்சம மூர்ச்சனைகள் முறையே வகுளாபரணம் (14), கோசலம் (71), கீரவாணி (21) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கும்.
ஹேமவதியின் ஜன்ய இராகங்கள் கீழ் வருமாறு.
↑ Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
↑ Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
சுத்த மத்திம இராகங்கள்
இந்து
நேத்ர
அக்னி
வேத
பாண
ருது
பிரதி மத்திம இராகங்கள்
ரிஷி
வசு
பிரஹ்ம
திசி
ருத்ர
ஆதித்ய