ஹேமா | |
---|---|
![]() | |
பிறப்பு | கிருஷ்ண வேணி கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1989– தற்போது |
வாழ்க்கைத் துணை | ஜான் [1] |
ஹேமா இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[2][3] தென்னிந்திய மொழிகளான தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
குணச்சித்திரம், நகைச்சுவை நாயகி வேடங்களில் திரைப்படங்களில் நடிக்கின்றார்.
ஹேமாவின் இயற்பெயர் கிருஷ்ண வேணி. இவர் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர். ஏழாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்துள்ளார். திரையுலகிற்கு வந்த பின்பு தனது இயற்பெயரை ஹேமா என்று மாற்றிக் கொண்டார்.