ஹேமேந்திர மோகன் போஸ் | |
---|---|
சுதேசி இயக்கத்தின் முன்னோடி பெங்காலி தொழில்முனைவோர் | |
தாய்மொழியில் பெயர் | হেমেন্দ্রমোহন বসু |
பிறப்பு | 1864 மைமன்சிங், வங்காளம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | 28 ஆகத்து 1916 (வயது 52) கொல்கத்தா, வங்காளம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
தேசியம் | பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
பணி | சுதேசி தொழில்முனைவோர் |
அறியப்படுவது |
|
பெற்றோர் | ஹரமோகன் போஸ் |
வாழ்க்கைத் துணை | மிருணாலினி போஸ் |
பிள்ளைகள் | ஜிதின் போஸ், நிதின் போஸ், கணேஷ் போஸ், கார்த்திக் போஸ், சௌமேந்திர மோகன் போஸ், மாலதி கோஷல் |
ஹேமேந்திர மோகன் போஸ் (Hemendra Mohan Bose) (பிறப்பு: 1864 - இறப்பு: 1961 ஆகத்து 28) இந்திய தொழில்முனைவோரான இவர் "குந்தாலின் முடி எண்ணெய்" மற்றும் "தெல்கோஷ் வாசனை திரவியம்' ஆகியவற்றை தயாரித்தார். கிராமபோன்கள் தயாரித்த முதல் இந்தியர் இவராவார். இவரது பல வணிகங்கள் தொழில் முறைபொழுதுபோக்குகள் மற்றும் விஞ்ஞான முன்னேற்றங்களில் ஆர்வம் ஆகியவற்றிலிருந்து தூண்டப்பட்டன. இவர் இந்தியாவில் வண்ணப் புகைப்படத்தின் முன்னோடியாகவும் இருந்தார். [1]
போஸ் 1866 ஆம் ஆண்டில் இந்நகரம் வங்காளதேசத்தில் மைமன்சிங் என்ற இடத்தில் பிறந்தார். அங்கு இவரது தந்தை ஹராமோகன் போஸ் தங்கியிருந்தார். குடும்பத்தின் மூதாதையர் வீடு மைமென்சிங் மாவட்டத்தில் உள்ள ஜெய்சித்தி கிராமத்தில் இருந்தது. மைக்கேல் கின்னரின் கூற்றுப்படி, போஸ் 1864 இல் தனது மூதாதையர் கிராமத்தில் பிறந்தார் எனத் தெரிகிறது. [2] ஐ.ஏ. தேர்ச்சி பெற்ற பின்னர் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர அனுமதி பெற்றார். கல்லூரியில் ஒரு மாணவனாக இருந்தபோது, அமில விபத்து ஏற்பட்டு இவரது கண்களில் காயம் ஏற்பட்டது. குணமடைந்த பிறகு, இவர் தனது மருத்துவ வாழ்க்கையை விட்டுவிட்டார். 1890 ஆம் ஆண்டில், போஸ் வாசனை திரவியம் தயாரிக்க பரிசோதனை செய்யத் தொடங்கினார். மேலும் வணிகத்தில் தனது நகர்வைத் தொடங்கினார். [3]
1894 ஆம் ஆண்டில், போஸ் தனது சொந்த வியாபாரத்தை கொல்கத்தாவில் 'எச்-போஸ் வாசனை திரவியம்' என்ற பெயரில் தொடங்கினார். அங்கு இவர் வாசனை திரவியங்களை வடிகட்டி விற்பனையில் ஈடுபட்டு வந்தார். ஆரம்ப வெற்றிக்குப் பின்னர், முடி எண்ணெய் மற்றும் லாவெண்டர் தண்ணீர், ஈ டி கொலோன், ரோஜாவின் பால் போன்ற கழிப்பறை பொருட்களைகளை தனது தயாரிப்புகளில் சேர்த்தார். மேலும் கொல்கத்தாவில் புதிய உற்பத்தி அலகு ஒன்றையும் அமைத்தார். [2] இவரது தயாரிப்புகளில் பிரபலமான குந்தாலின் முடி எண்ணெய் மற்றும் தெல்கோஷ் வாசனை திரவியம் ஆகியவை அடங்கும்.
1900 வாக்கில், கொல்கத்தாவில் குண்டாலின் அச்சகம் என்ற பெயரில் ஒரு அச்சகம் மற்றும் பதிப்பகத்தை இவர் தொடங்கினார். இது தற்செயலாக இவரது வாசனை திரவிய வியாபாரத்திற்கு அடுத்ததாக இருந்தது. 1903 ஆம் ஆண்டில், இவர் குந்தாலின் புரஸ்காரை நிறுவினார். மேலும் இளம் எழுத்தாளர்களின் திறமையை வெளிப்படுத்த ஊக்குவித்தார். ஜகதீஷ் சந்திரபோஸ் தான் எழுதிய ஒரு சிறுகதைக்காக குந்தாலின் புரஸ்காரை பெற்ற முதல் நபராவார். பின்னர் சரத் சந்திர சட்டோபாத்யாய் முதல் அச்சிடப்பட்ட வெளியீடான மந்திரா குந்தாலின் புரஸ்கார் பெற்றது.
போஸ் ஒரு மிதிவண்டி ஆர்வலராக இருந்தார். அவரே மிதிவண்டியை ஓட்டக் கற்றுக்கொண்டு, அதை எப்படி சவாரி செய்வது என்று தனது நண்பர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். 1903 ஆம் ஆண்டில், இவர் தனது சகோதரர் ஜதிந்திர மோகன் போஸுடன் சேர்ந்து இந்தியருக்குச் சொந்தமான மிதிவண்டி நிறுவனத்தை நிறுவினார். இந்த நிறுவனம் ரோவர் சைக்கிள்களின் விநியோகஸ்தர்களாகவும் இருந்தது. [2] இது இவரது சுதேசி முயற்சிகளில் முதன்மையானதாகும். [4] மோட்டார் காரை எப்படி ஓட்டுவது என்பதையும் கற்றுக்கொண்டார். 1900 ஆம் ஆண்டில், இவர் இரண்டு இருக்கைகள் கொண்ட மோட்டார் காரை வாங்கி அதை தானே ஓட்டினார். 1903 ஆம் ஆண்டில் இவர் பிரான்சில் இருந்து டார்ராக் 8 ஹெச்பி ஒற்றை சிலிண்டர் மோட்டார் காரையும், 1905 ஆம் ஆண்டில் டார்ராக் என்ற 2 சிலிண்டரையும் இறக்குமதி செய்தார். [5] கொல்கத்தாவில் இந்தியருக்கு சொந்தமான முதல் ஆட்டோமொபைல் விநியோகஸ்தரான தி கிரேட் ஈஸ்டர்ன் மோட்டார் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்த இவர், பிரிட்டிசு மேலாளராகப் பணிபுரிந்தார். பார்க் வீதியில் 'கிரேட் ஈஸ்டர்ன் மோட்டார் ஒர்க்ஸ்' என்ற பழுதுபார்க்கும் பிரிவையும் அமைத்தார்.
1900 ஆம் ஆண்டில், போஸ் ஒரு எடிசன் கிராமபோனைப் பெற்ற பிறகு, தனிப்பட்ட முறையில் ஒலிப் பதிவுகளைத் தொடங்கினார், [6] . இவர் தனது நண்பர்களது பதிவுகளை நிதானமான முறையில் பதிவு செய்யத் தொடங்கினார். எச். போஸ் பதிவுசெய்த முதல் நபர்களில் இவரது மாமா சர் ஜகதீஷ் சந்திரபோஸ், பி சி ராய் மற்றும் இவரது நண்பர் இரவீந்திரநாத் தாகூர் ஆகியோரும் அடங்குவர். [3] இவரது நிறுவனம் "போஸ் பாத்தே ரெக்கார்டிங்ஸ்" என்ற பெயரில் அறியப்பட்டது . பின்னர் இது "எச். போஸ் சுதேசி ரெக்கார்ட்ஸ்" என்ற பெயரிடப்பட்டது. 1907 வாக்கில், போஸின் பதிவுகளுக்கான தேவை மிகவும் வளர்ந்தது. இவர் பதிவு செய்வதற்காக தனது சொந்த சிலிண்டர்களை தயாரிக்கத் தொடங்கினார். எச். போஸ் சுதேசி இயக்கத்தின் நன்கு அறியப்பட்ட புரவலர் ஆவார். இவருடைய பல பதிவுகள் இந்த விஷயத்தை உள்ளடக்கியது. [7]
போஸ் இந்தியாவில் வண்ண புகைப்படத்தின் முன்னோடியாக இருந்தார். [1] இவர் தனது புகைப்படங்களுக்கு ஆட்டோக்ரோம் லூமியர் ஸ்லைடுகளைப் பயன்படுத்தினார். விளையாட்டு ஒன்றியத்தின் நிறுவனர் தலைவராக இருந்தார்.
{{cite book}}
: Cite has empty unknown parameter: |coauthors=
(help)