ஹொன்னம்மன ஏரி
ஹொன்னம்மன கெரெ | |
---|---|
நகர் | |
![]() | |
சோமவாரப்பேட்டையில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 12°37′16″N 75°52′49″E / 12.620991°N 75.880165°E | |
நாடு | ![]() |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | குடகு |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
ஹொன்னம்மன கெரெ எனப்படும் ஹொன்னம்மன ஏரி (கன்னடம்: ಹೊನ್ನಮ್ಮನ ಕೆರೆ) கர்நாடகாவில் குடகிலுள்ள சோமவாரப்பேட்டை நகரிலிருந்து ஆறு (6) கி.மீ. தொலைவில் உள்ள சூலிமாலத்தே சிற்றூருக்கருகே இருக்கும் தொட்டமாலத்தேவில் இருக்கும் ஒரு ஏரியும் புனிதமான இடமுமாகும். இது குடகிலிருக்கும் மிகப்பெரிய ஏரியாகும்.[1] ஆண்டுக்கு ஒருமுறை, கவுரி ஹப்பா திருவிழாவின் போது, சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது, மேலும் 'பாகினா'[2] எனப்படும் ஹொன்னம்மா தெய்வத்துக்குரித்தான படையல் இந்த ஏரிக்கு அளிக்கப்படுகிறது.[3]
கெரெகே ஹாரா என்ற கதை ஹொன்னம்மன கெரெவை உருவாக்கியதிலிருந்து பெறப்பட்டது. தொன்மக்கதைப்படி, பெருவணிகர் ஒருவரின் கடைசி மருமகளான ஹொன்னம்மா, மக்கள் நலனுக்காக தனது உயிரை ஈந்ததன் மூலம் தெய்வமாக வணங்கப்படுகிறார். அவரைச் சிறப்பிக்க ஒரு கோவில் அமைக்கப்பட்டது, மேம்பட்ட வசதிகளை வழங்குவதற்காகப் பின்னர் அது புதுப்பிக்கப்பட்டது.[3]
ஹொன்னம்மன கெரெ பல மலைகளாலும், முகடுகளாலும், காபித் தோட்டங்களாலும் சூழப்பட்டுள்ளது.
ஹொன்னம்மன கெரெவுக்கு அருகில் ஒரு சில தங்குமிடங்கள் உள்ளன. டிரோப்பிக்கல் ரெய்ன் என்ற தங்குமிடம் (பண்ணை) இந்த ஏரிக்கு ஒரு (1) கிமீ தொலைவில் உள்ளது.
ஹொன்னம்மன கெரெவின் வெப்பநிலை, குடகு மாவட்டத்தின் பிற பகுதிகளைப் போலவே ஆண்டு முழுவதும் 16 முதல் 27 °C அளவில் இருக்கின்றது.