ஹோண்டா டியோ என்பது ஜனவரி 1988 இல் ஹோண்டாவால் அறிமுகம் செய்யப்பட்ட குதியுந்து ஆகும். இந்தக் குதியுந்து முதலில் ஜப்பானில் 2-ஸ்ட்ரோக் மாடலாக வெளிவந்தது. 2003 இல் சீனாவில் சுண்டிரோ ஹோண்டா மோட்டார் சைக்கிள் கோ, லிமிடெட் நிறுவனத்தால் முதல் 4-ஸ்ட்ரோக் ஸ்கூட்டராக விற்கப்பட்டது. .
டியோ இரண்டு 4-ஸ்ட்ரோக் பதிப்புகளைக் கொண்டுள்ளது. ஒன்று AF-சீரியஸ் 50 (SK50) மற்றொன்று JF சீரியஸ் 110 (NSC110).
உற்பத்தியாளர் | ஹச்எம்எஸ்ஐ |
---|---|
வேறு பெயர்கள் | ஹோண்டா லீட் |
நிறுவனம் | ஹோண்டா மோட்டார் கோ லிமிடெட் |
தயாரிப்பு | 2002–தற்போது; |
பொருத்துதல் | நரஸ்புரா, கருநாடகம், இந்தியா |
பின்னையது | ஹோண்டா டியோ எஸ்டிடி/ டீலக்ஸ் |
வகை | ஸ்கூட்டர் |
இயந்திரம் | 109.51 cc (6.683 cu in), SOHC, நான்கு ஸ்டிரோக் எஞ்சின், ஏர் கூல்டு எஞ்சின், ஒற்றை சிலின்டர் எஞ்சின் |
விட்டம்/வீச்சு | 47 mm × 60.1 mm (1.85 அங் × 2.37 அங்) |
அமுக்க விகிதம் | 10:1+0.2 |
உச்ச வேகம் | 85 km/h (53 mph) |
மூட்டும் வகை | எலக்ட்ரிக் ஸ்டார்டர் |
பரிமாற்றம் | சிவிடி |
தடுப்புக்கள் | (130 mm (5.1 அங்)) |
சாய்வு, காற் சில்லு | 27˚30', 92 mm |
சில்லுத் தளம் | 1,260 mm (50 அங்) |
அளவுப் பிரமாணங்கள் | நீளம் 1,808 mm (71.2 அங்) அகலம் 723 mm (28.5 அங்) உயரம் 1,150 mm (45 அங்) |
இருக்கை உயரம் | 765 mm (30.1 அங்) |
எடை | 105 kg (231 lb) (உலர்ந்த) |
எரிபொருட் கொள்ளளவு | 5.3 லிட்டர்கள் (1.2 imp gal; 1.4 US gal) |
எண்ணெய்க் கொள்ளளவு | 1.0 லிட்டர் (0.22 imp gal; 0.26 US gal) |
எரிபொருள் நுகர்வு | 60 km/L (170 mpg‑imp; 140 mpg‑US) |
ஹோண்டா டியோ என்பது இந்தியாவில் ஹோண்டாவின் துணை நிறுவனமான எச். எம். எஸ். ஐ தயாரித்த குதியுந்தாகும். இது 2002 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தியாவில் 30 லட்சம் விற்பனையை எட்டிய குவியுந்து ஆகும்.[1] உள்நாட்டு சந்தையைத் தவிர, டியோ நேபாளம், பங்களாதேஷ், இலங்கை மற்றும் இலத்தீன், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மறுவடிவமைக்கப்பட்ட பதிப்பு ஐரோப்பிய சந்தையில் ஹோண்டா லீட் என விற்கப்படுகிறது.
அசல் மாடலில் 102சி , ஏர்கோல்டு இஞ்சின், நான்கு ஸ்டிரோக் கொண்டதாகும்.
2013 எச்.எம்.எஸ்.ஐ டியோ எரிபொருள் செயல்திறன் மற்றும் ஒருங்கிணைந்த பிரேக்குகளில் மேம்பாடுகளைக் கோரியது.[2]
2017 ஆம் ஆண்டில் ஹோண்டா, டியோவின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியது. பாரத் ஸ்டாண்டர்ட் - IV (பிஎஸ்-ஐவி) உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்க, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஸ்பீடோமீட்டர் வடிவமைப்பைக் கொண்டு, எல்இடி ஹெட்லைட் சேர்க்கப்பட்டுள்ளது. பின்னர் 2018 ஆம் ஆண்டில், ஹோண்டா டியோ டிஎக்ஸ் அறிமுகப்படுத்தியது. இதில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் மற்றும் பவர் இருக்கைகள் இடம்பெற்றுள்ளன. அதே நேரத்தில் 2017 மாடலின் தோற்றத்தைத் தக்க வைத்துக் கொண்டன.
புதிய 2020 ஹோண்டா டியோ வெளியாகியுள்ளது. முந்தைய மாடலை விட மாறுபட்ட வடிவமைப்பு மட்டுமல்லாமல் தற்போது புதிய என்ஜினுடன் பாரத் ஸ்டேஜ் 6 (பிஎஸ்6) மாசு உமிழ்வுக்கு ஏற்ற என்ஜினை கொண்டுள்ளது.
புதிய 2023 ஹோண்டா டியோ 125 வெளியாகியுள்ளது. 110 மாடலின் வடிவமைப்பினை பெற்று மட்டுமல்லாமல் தற்போது புதிய 125சிசி என்ஜினுடன் பாரத் ஸ்டேஜ் 6 (பிஎஸ்6) மாசு உமிழ்வுக்கு ஏற்ற என்ஜினை கொண்டுள்ளது.